#Breaking : மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு.!- பிரதமர் மோடி அறிவிப்பு.!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு இன்று நிறைவு பெறுவதாக இருந்ததது. இந்த ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தற்போது பிரதமர் மோடி கூறுகையில், ‘ இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு மேலும் 19 நாள் நீட்டிக்கப்பட்டு, வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும்.’ என அறிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம்,புதுச்சேரி உள்ளிட்ட 9 … Read more

இன்றுடன் நிறைவுபெறும் ஊரடங்கு உத்தரவு ! பிரதமர் மோடி உரை

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாடவுள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.இதற்குஇடையே அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியபோது பல மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது. ஆனால் ஒடிஷா , பஞ்சாப் மஹாராஷ்டிரா,தமிழகம்,புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது.எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு … Read more

மே மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் -முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான பொருட்கள் விலையின்றி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மருத்துவமனைகள் , மருந்துக்கடைகள், காய்கறி, பழக்கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல இயங்கி வந்தன.எனவே தமிழக அரசு ,ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் வழங்கப்படும் பொருட்கள் இந்த மாதம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.இதன்படி ஏப்ரல் மாத பொருட்களும் வழங்கப்பட்டது.இந்நிலையில் … Read more

தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு.! – அரசு அறிவிப்பு.!

தமிழகத்தில் நாளை நிறைவடைய இருந்த ஊரடங்கு  வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் ஏற்கனவே நாளை வரை நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாளை முடிவடைய இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தததால் ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு … Read more

ஊரடங்கை மீறி காரில் சுற்றால் ! போலீசார் கூறியதை ஏற்க மறுத்து கையை வெட்டிய கும்பல்

பஞ்சாப்பில்  ஊரடங்கை மீறி ஊர் சுற்றியதை தட்டிக் கேட்ட போலீசின் கையை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் … Read more

தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக லாரி, சரக்கு ரயில் மற்றும் படகுகளில் பயணித்த காவலர்.!

உத்திர பிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ் யாதவ். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நக்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்.  இவரது தயார் சில தினங்களுக்கு இறந்துவிட்டார். இவரது இறுதி சடங்கிற்கு பங்கேற்பதற்காக தான் வேலைபார்த்த இடத்திலிருந்து, லாரி, சரக்கு ரயில் படகு என பல விதமாக 1,100 கிமீ பயணித்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.  அவர் முதலில், சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூரிலிருந்து புறப்பட்டு முதலில் தலைநகர் ராய்ப்பூருக்கு … Read more

கொரோனாவால் இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி.! – உலக வங்கி தகவல்.!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் இந்த சரிவு குறித்து, உலக வங்கி தனது அறிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் சரிவடையும் என கூறப்பட்டுள்ளது.  மேலும், உலக வங்கி அறிக்கையில் இந்தியாவை பற்றி கூறுகையில் , ‘ இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடையும். இந்த ஆண்டு இந்திய … Read more

பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் – தமிழக அரசு

ஊரடங்கு  உத்தரவால் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.  கொரோனா வைரஸால் இந்தியாவில் 8000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் அனைவரையும் வீட்டுக்குள் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு  ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,ஊரடங்கு உத்தரவு … Read more

ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. தினமும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டு இருப்பதால், ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு தரப்பிலிருந்தும் பிரதமருக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.  இந்நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். இன்று இரவு பிரதமர் மோடி, ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன.  இந்த சமயத்தில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக … Read more

ஊரடங்கை நீட்டிக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார்.! – அரவிந்த் கெஜ்ரிவால் தகவல்!

பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி  மூலம் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின்னர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ பிரதமர் மோடி ஊரடங்கை நீட்டிக்கும் நல்ல முடிவை எடுத்துள்ளார். இது நல்ல முடிவு. இந்தியா ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதால் தான், பல வளர்ந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவிற்கு ஏற்படவில்லை. இந்த சமயத்தில் ஊரடங்கை … Read more