டெல்லி : இன்று காலை டெல்லி முதல்வர் அதிஷி மர்லினா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அதில் 2025 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தேசிய தலைநகரில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணின் வங்கி கணக்குகளிலும் ரூ.2,100 டெபாசிட் செய்யப்படும் என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இது குறித்து பேசிய பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் […]
டெல்லி : தலைநகர் டெல்லியில் இன்னும் 2 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2 சட்டமன்ற தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 2 முறையும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக தொடர்ந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் தனது முதலமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார். அதன் பிறகு டெல்லி மாநில முதலமைச்சராக அதிஷி தற்போது பொறுப்பில் உள்ளார். நாட்டின் தலைநகர் என்பதால், மாநிலத்தின் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி பதவி என அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்து கொண்டார். கைலாஷ் கெலாட், டெல்லி மாநில போக்குவரத்துத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறை அமைச்சராக பொறுப்பில் இருந்து வந்தார். அவர் டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், டெல்லி எம்எல்ஏவாகவும், மாநில அமைச்சராகவும் மக்கள் […]
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த வாரம் வெள்ளியன்று உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளியே வந்தார். இருந்தாலும், அவர் வகித்து வந்த டெல்லி முதமைச்சர் பதவியை தொடர முடியாதபடி உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது. இதனை அடுத்து கடந்த வாரம் தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். இன்னும் சில மாதங்களில் வரும் டெல்லி […]
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்த டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், கடந்த வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றம் அளித்த ஜாமீனில் வெளியே வந்தார். இருந்தும், டெல்லி மாநில முதல்வர் பதவியை தொடர முடியாத வண்ணம் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்தது. இதனைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், புதிய முதல்வராக ஆம் ஆத்மி மூத்த நிர்வாகியும், டெல்லி அமைச்சருமான அதிஷியை முன்மொழிந்தார் கெஜ்ரிவால். இன்னும் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தான் வகித்து வரும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து யார் அடுத்த டெல்லி மாநில முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்ற கேள்வி, தற்போது டெல்லி மட்டுமல்லாது தேசிய அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கில் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலில் அமலாக்கத்துறையினர் கைது செய்து இருந்தனர். அடுத்ததாக இதே வழக்கில் சிபிஐ விசாரணை குழுவினரும் கைது செய்தனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட வழக்கில், கெஜ்ரிவாலுக்கு முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தாலும், சிபிஐ வழக்கில் அவர் கைதாகி இருந்ததால் கெஜ்ரிவால், டெல்லி திகார் சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கில் ஜாமீன் […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா, டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். 17 மாதங்கள் சிறையில் இருந்த சிசோடியாவுக்கு நேற்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளியே வந்த மணீஷ் சிசோடியா இன்று டெல்லியில் நடைபெற்ற ஓர் அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் தற்போது ஜாமீனில் வெளியே வந்தது விடுமுறையை கொண்டாட அல்ல. […]
ஆம் ஆத்மி கட்சி : ஹரியானா மாநிலத்தில் அக்டோபரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சி தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என கெஜ்ரிவால் மனைவி வாக்குறுதி அளித்துள்ளார். ஹரியானா சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் […]
டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருந்தார். அமலாக்கத்துறையின் இந்த கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணை முன்னதாக நடைபெற்று வந்தத நிலையில் இன்று நடைபெற்ற […]
அரவிந்த் கெஜ்ரிவால் : மதுமான கொள்கை வழக்கு தொடர்பாக, சிபிஐயால் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை இன்று நீதிமன்றம் விசாரணையை எடுத்துக்கொண்டது. கடந்த ஜூன் 26 ஆம் தேதி அன்று, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகு டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ இந்த வழக்கில் அவரை முறைப்படி கைது செய்தது. இது தொடர்பான வழக்கில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மீ கட்சிக்கு எதிராக அமலாக்க துறையினார் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையை டெல்லி […]
அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதலைமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை சி.பி.ஐ சமீபத்தில் கைது செய்து இருந்தது. மேலும், இதனை தொடர்ந்து சி.பி.ஐ கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்திருந்தார். இதனால், இன்றைய நாளில் இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை தொடர்ந்து இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு […]
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அந்த புகாரின் பெயரில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டஅரவிந்த் கெஜ்ரிவிலுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூன் 20ஆம் தேதி ஜாமின் வழங்கியது. அதன் பின்னர் அமலாக்கத்துறை உடனைடியாக உயர்நீதிமன்றத்தை நாடி ஜாமீன் மீது இடைக்கால தடை வாங்கியது. பின்னர், நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் […]
அரவிந்த் கெஜ்ரிவால்: மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததன் பெயரில் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அளிக்கப்பட்டிருந்த நிலையில் பின் அந்த ஜாமீனை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின் இன்று காலையில் டெல்லி திகார் சிறையில் இருந்த கெஜ்ரிவாலை அதே மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ கைது செய்தது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சித் […]
டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பெயரில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தற்போது, டெல்லி திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலை அதே மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ கைது செய்துள்ளது. முன்னதாக, இதற்கான ஆதாரங்களை டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிபிஐ இன்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கடந்த […]
அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லியில் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதலைமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 20-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது. சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி மாநில உயர்நிதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், டெல்லி உயர் […]
டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வேளையில், கடந்த வியாழன் அன்று சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. அதனை எதிர்த்து அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கெஜ்ரிவால் ஜமீனுக்கு அடுத்த நாளே (வெள்ளி) தடை வாங்கியது. இந்த ஜாமீன் […]
அரவிந்த் கெஜ்ரிவால்: நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்த நிலையில், தற்போது ஜாமீன் வழங்க இடைக்கால தடைவிதித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். கடந்த மார்ச்-21 ம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது டெல்லி சிறப்பு நீதிமன்றம். நேற்று விசாரணை நீதிமன்றம் அளித்த […]
அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லி முதலைமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது, தற்போது வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டின் கடந்த மார்ச்-21 ம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது டெல்லி சிறப்பு நீதிமன்றம். இன்றைய நாளில் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து […]
அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் நீட்டிப்பு வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், தன்னுடைய கைதை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் ஜெக்ரிவால் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து, தேர்தலையொட்டி ஜூன் […]