பூஞ்ச் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாநிலம் சூரன்கோட் செக்டாரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாநிலம் சூரன்கோட் செக்டாரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்

பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து என்கவுண்டராக மாறியது.

பூஞ்ச் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து கொல்லப்பட்ட பயங்கரவாதியின் உடல் இன்னும் மீட்கப்படவில்லை என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பூஞ்ச் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை..!