ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் டிசம்பர் 21 அதாவது கடந்த வியாழக்கிழமை மாலை 3.45 மணியளவில் ரஜோரியின் பூஞ்ச் பகுதியில் தேரா கி காலி வழியாகச் சென்ற இரண்டு ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த நடந்த தாக்குதலில் 4 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, அன்றைய தினம் முதல், ரஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிர […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் புதன் கிழமை அன்று மினி பஸ் ஒன்று பள்ளத் தாக்கில் விழுந்ததில் 11 பேர் உயிரிழப்பு மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தின் சாவ்ஜியான் கிராமத்தில் மினி பஸ் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் விழுந்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். பள்ளத்தாக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியை அப்பகுதி மக்கள் மற்றும் ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த பலர் மாண்டி யிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாண்டி தாசில்தார் […]
ஜம்மு காஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயம். ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் நகரின் சாவ்ஜியன் பகுதியில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாநிலம் சூரன்கோட் செக்டாரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து என்கவுண்டராக மாறியது. பூஞ்ச் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். என்கவுன்ட்டர் நடந்த […]
பாகிஸ்தான் ஹெலிகாப்டர் இந்திய வான்பரப்பில் பறந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகல், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்து பறந்து கொண்டிருந்தது.இந்த விமானத்தை கண்ட இந்திய பாதுகாப்புப் படையினர் அதை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயற்சித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இருநாட்டிடையே பதற்றமான சூழல் நிலவுகின்ற நிலையில் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் இந்திய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பாதுகப்புப் படைகள் […]