ராஜஸ்தானின் ஃபுட் பாய்சனால் 78 மாடுகள் உயிரிழப்பு.!

About 78 cows have died of suspected food poisoning at a government aided cattle shelter in Rajasthan's Churu district.

ராஜஸ்தானின் சுருவில் உள்ள அரசு உதவி பெறும் கால்நடை தங்குமிடத்தில் 78 மாடுகள் ஃபுட் பாய்சனால் உயிரிழந்துள்ளது.

ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் அரசு உதவி பெறும் கால்நடை தங்குமிடத்தில் 78 மாடுகள் ஃபுட் பாய்சனால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டுள்ளது. இந்த மாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் இறந்துவிட்ட நிலையில், இன்னும் சில நோய்வாய்ப்பட்டுள்ளன என்று மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விலங்கு பராமரிப்புத் துறையின் இணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ் கூறுகையில், விலங்குகள் ஃபுட் பாய்சனால் இறந்தன. சர்தர்ஷாஹரில் உள்ள பிலியுபாஸ் ராம்புரா கிராமத்தில் அமைந்துள்ள மாட்டு முகாமில் திணைக்களத்தின் குழுக்கள் உள்ளது என்றும் தீவன மாதிரிகள் சோதனைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதில் என்ன பரிதாபம் என்றால்; பசுக்களுக்கும் கிருஷ்ணருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட திருவிழாவான ‘கோபாஷ்டமி’ க்கு ஒரு நாள் முன்பு இவ்வளவு பெரிய மாடுகளின் மரணம் நிகழ்ந்தது அம்மாவட்டத்தில் வருத்தத்தை அளித்துள்ளது.