காவு சமூகத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீடு...ஆந்திர சட்டமன்றம் ஒப்புதல்...!!

ஆந்திராவில் காவு சமூகத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.

ஆந்திராவில் காவு சமூகத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் காவு சமூகத்தினர் கணிசமான அளவில் உள்ளனர். ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள இந்த மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் காவு சமூக மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆந்திர மாநில சட்டமன்றத்தில் நிறைவேறி உள்ளது. மத்திய அரசு பொதுப்பிரிவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தியுள்ள நிலையில் ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.