கர்நாடகாவில் பரபரப்பு.! 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.? எடியூரப்பா மீது போக்சோ வழக்கு.!

Yediyurappa [File image]

Yediyurappa : கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜகாவின் மூத்த தலைவருமான பிஎஸ். எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் தற்போது  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிப்படைந்ததாக கூறப்படும் 17 வயது சிறுமியின் தயார் அளித்த புகாரின் கீழ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More :- தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த ரிப்போர்ட்.!

கடந்த பிப்ரவரி 2 ம் தேதி, பெங்களூரை சேர்ந்த 17-வயது சிறுமி கல்வியின் உதவிக்காக தனது தாயாருடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்றுள்ளதாகவும், வீட்டிற்கு வந்த சிறுமியை தனி அறையில் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பெயரில் பெங்களூருவில் உள்ள  சதாசிவம் நகரில் உள்ள காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், தனி அறைக்கு அழைத்து சென்ற சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்த பிறகு இதனை யாரிடமும் சொல்ல கூடாது எனவும், இதை வெளியில் சொன்னால் நீங்கள் பெரிய விபரீதங்களை சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் மிரட்டி எடியூரப்பா அனுப்பியதாகவும் அந்த தாயார் அளித்த புகாரில் தெரிவித்து இருக்கிறார்.

Read More :- முகத்தில் வழிந்த ரத்தம்.. பதறிய தலைவர்கள்.. பத்திரமாக வீடு திரும்பிய மம்தா.! 

இதை தொடர்ந்து 17-வயது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் கீழ் பெங்களூரு சதாசிவம் நகரில் உள்ள காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்