1000 EV சார்ஜிங் நிலையங்கள் 2024க்குள் அமைக்கப்படும்..! மேற்கு வங்க அரசு அறிவிப்பு..!

Default Image

மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் 1,000 EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ள இந்த கால கட்டத்தில் மக்கள் அதற்கான மாற்று வழியை தேடிக்கொண்டிருக்கின்றனர். இதனால் தற்பொழுது மக்களிடையே எலெக்ட்ரிக் வாகனங்களின் மோகம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மக்களால் பயன்படுத்தப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களின் சார்ஜிங் நிலையங்களானது  குறைவாக உள்ளது.

இதன் காரணமாக மேற்கு வங்க அரசு 2024 ஆம் ஆண்டிற்குள் 1000 (EV)எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது. இவற்றில் 849 நிலையங்கள் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட உள்ளதாக மாநில மின் துறை அதிகாரி எஸ்.சுரேஷ்குமார் கூறியுள்ளார்.

நான்கு வழிச்சாலையில் 25 கிலோமீட்டருக்கு ஒரு நிலையம் அமைக்கப்படும் என்றும் “இது பேட்டரிகள் சார்ஜ் தீர்ந்துவிடும் என்ற மக்களின் கவலையை நீக்கும்” என்று அவர் மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்