கால் டாக்ஸி ஓட்டுநர்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்த அண்னா சாலை...!

In Chennai, a sudden protest by OLA,UBER taxi drivers caused traffic congestion on Anna Road.

சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் திடீர் போராட்டத்தால் அண்னா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் ஓலா (OLA) மற்றும் உபர் (UBER) நிறுவனத்தில் பணிபுரியும் கால் டாக்சி ஓட்டுநர்கள் இன்று சேப்பாக்கத்தில் அறவழியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது,நிறுவனங்கள் தங்களிடம் பெறும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும்,கடந்த 5 வருடங்களாக ஊதியமானது தங்களுக்கு உயர்த்திக்கொடுக்கப்படாமல் உள்ளதால், அதனை 80% உயர்த்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால்,யாரும் எந்தவிதமான பதிலையும் தரவில்லை.

இந்நிலையில்,திடீரென்று அவர்கள் தங்கள் கார்களை எடுத்துக்கொண்டு,அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தின் அருகே சாலையில் கார்களை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால்,அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ,ஓட்டுநர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு,போராட்டத்தை கலைத்தனர்.

unknown node