வாடகை கார்… அரசே எடுத்து நடத்தலாம்.! சென்னையில் ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம்.!

Ola Uber Car drivers Protest

இன்று சென்னையில்  ஓலா, ஊபர்  போன்ற தனியார் நிறுவனங்கள் மூலம் வாடகை கார் ஓட்டும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இருசக்கர வாடகை பைக் முறையால் , கார் ஓட்டுனர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தனியார் நிறுவனங்கள் அதிகம் கமிஷன் வசூல் செய்கின்றன இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைக்கின்றனர். இது தொடர்பாக, இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வாடகை கார் ஓட்டுநர் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில்,  ஓலா, ஊபர் … Read more

பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ சேவைகளை நிறுத்த உத்தரவு…

பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோக்கள் சட்டவிரோதம் என கூறி இந்த சேவைகளை 3 நாட்களுக்கு நிறுத்த உத்தரவு. பெங்களூரில் ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோ சேவைகளை 3 நாட்களுக்கு நிறுத்த கர்நாடக போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது, கர்நாடகாவில் ஓலா, ஊபர் மற்றும் ரேபிடோ ஆட்டோ நிறுவனங்களை நடத்திவரும் ஏ.என்.ஐ டெக்னாலஜீ மூன்று நாட்களில் தனது சேவையை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், இதுதொடர்பான … Read more

‘ஓலா கார்ஸ்’…….”புதிய மற்றும் பழைய கார்கள் வாங்கலாம்” – ஓலா நிறுவனம்..!

கார்களை வாங்குவது,விற்பது தொடர்பான வாகன வர்த்தக தளத்தில் ஓலா நிறுவனம் களமிறங்கியுள்ளது. பிரபல வாடகை கார் நிறுவனமான ஓலா,மின்சார வாகனத்துறையில் முதலீடு செய்து,ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் புதிய சாதனை படைத்து வருகிறது.இந்த நிலையில்,தற்போது வாகன வர்த்தக தளத்தில் களம் இறங்கியிருக்கிறது. ‘ஓலா கார்ஸ்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வாகன வர்த்தக தளம் மூலமாக புதிய கார்கள் மற்றும் பழைய கார்கள் வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,வாகன நிதி மற்றும் காப்பீடு, பதிவு, வாகன … Read more

2 நாளில் ரூ.1,100 கோடிக்கு ஸ்கூட்டர்கள் விற்பனை – ஓலா நிறுவனம் அறிவிப்பு..!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியைத் தாண்டியது. ஓலா குழும தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் இன்று தனது ட்விட்டரில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியைத் தாண்டியதாகவும், இ-ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் காட்டிய உற்சாகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது என்று அவர் கூறினார். ஓலா எலக்ட்ரிக் மின்சார ஸ்கூட்டரை கடந்த புதன்கிழமை  விற்கத் தொடங்கியது. இதில் ஓலா எஸ் 1 மற்றும் எஸ் … Read more

குட்நியூஸ்…”பெண்களால் மட்டுமே நடத்தப்படும்” – ஓலா நிறுவனம் அசத்தல் அறிவிப்பு..!

ஓலா ஃபியூச்சர் தொழிற்சாலை 10,000 க்கும் மேற்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்துவதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான பிரபல ஓலா எலக்ட்ரிக் நிறுவத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் திங்களன்று எதிர்கால ஓலா தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்: “தற்சார்பு இந்தியாவுக்கு தற்சார்பு பெண்கள் தேவை. பெண்கள் இந்தியாவில் இருந்து மின்சார வாகன புரட்சியை உலகிற்கு கொண்டு வருவார்கள்!இந்தியாவின் பொருளாதார … Read more

கால் டாக்ஸி ஓட்டுநர்களின் போராட்டத்தால் ஸ்தம்பித்த அண்னா சாலை…!

சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர்களின் திடீர் போராட்டத்தால் அண்னா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் ஓலா (OLA) மற்றும் உபர் (UBER) நிறுவனத்தில் பணிபுரியும் கால் டாக்சி ஓட்டுநர்கள் இன்று சேப்பாக்கத்தில் அறவழியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது,நிறுவனங்கள் தங்களிடம் பெறும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும்,கடந்த 5 வருடங்களாக ஊதியமானது தங்களுக்கு உயர்த்திக்கொடுக்கப்படாமல் உள்ளதால், அதனை 80% உயர்த்திக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால்,யாரும் எந்தவிதமான பதிலையும் தரவில்லை. இந்நிலையில்,திடீரென்று அவர்கள் தங்கள் கார்களை … Read more

OLA, Uber வாகனங்களின் ஓட்டுநரா நீங்கள்? அப்ப இதை கண்டிப்பா படிங்க?

OLA, Uber போன்ற நிறுவனங்களில் இணைந்து வாடகைக்கு கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 80% வழங்க வேண்டும். இன்று வாகனத்தை வாடகைக்கு வாங்கி ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, அந்த வாகனத்தின் உரிமையாளர்கள் மிகக்குறைந்த அளவிலான பணத்தையே ஓட்டுநர்களுக்கு ஊதியமாக அளிக்கின்றனர். அந்த வகையில், OLA, Uber போன்ற நிறுவனங்களில் இணைந்து வாடகைக்கு கார்களை ஓட்டும் ஓட்டுனர்களுக்கு, பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து 80% வழங்க வேண்டும் என்றும், மீதமுள்ள 20%-த்தை  பெற … Read more

செப்டம்பர் 1 முதல் ஓலா, உபெர் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தில்

உபெர் மற்றும் ஓலா டிரைவர்கள் வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக கூறியுள்ளனர். என்.சி.ஆரின் தடைசெய்யப்பட்டுள்ள பொது போக்குவரத்துக்கு மத்தியில், ஓலா மற்றும் உபெர் ஆகிய நிறுவனங்களில் பணி புரியக்கூடிய ஓட்டுநர்கள் வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளனர். மேலும் அவர்களது பிரச்சினைகளை தீர்த்துவைக்க அரசாங்கம் தவறும் பட்சத்தில் என்.சி.ஆரின் சங்கத்தில் உள்ள சுமார் 2 லட்சம் ஓட்டுனர்கள் உடன் வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம் என டெல்லியில் உள்ள … Read more

தொடரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்.! முதற்கட்டமாக 1400 ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பும் ஓலா.!

ஊரடங்கால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் ஓலா நிறுவனம் முதற்கட்டமாக தங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய  உள்ளது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் பொது போக்குவரத்துகள், கால் டாக்சி போன்ற சேவைகள் துவங்கப்படாமல் இருந்து வருகின்றன. கால் டாக்ஸி சேவையில் உலக அளவில் முக்கியமாக இருக்கும் ஓலா நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிறுவனம் முதற்கட்டமாக தங்கள் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 1,400 பேரை பணிநீக்கம் … Read more

அரசுக்கு கட்டுப்பட்டு அவசர தேவைகளுக்கு மட்டுமே எங்கள் சேவை தொடரும்! ஓலோ கார் டாக்சி நிறுவனம்!

உலகளவில் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இந்த கொரோனா வைரசுக்கு 7 பேர் இதுவரையில் பலியாகியுள்ளதாகவும், 460 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.  இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு கார் சர்விஸ் நிறுவனமாகிய ஓலா நிறுவனம் குறைந்த வாகனங்களுடன், அவசர தேவைக்கு மட்டுமே வரும் என ஓலா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.