#Corona death: தமிழகத்தில் இன்று மட்டும் 116 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று மட்டும் 116 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

தமிழகத்தில் இன்று மட்டும் 116 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.

தமிழகத்தில்  இன்று ஒரே நாளில் 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,293 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் இன்று 22 பேர் உயிரிழந்ததால் இதுவரை 2,537 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனாவால் இன்று 116 பேர் பலியாகியுள்ளனர். அதில், 44 பேர் தனியார் மருத்துவமனையிலும், 72 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 108 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து இன்று 5,742 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,01,913 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

.

#Corona death: தமிழகத்தில் இன்று மட்டும் 116 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.!