#Breaking: தமிழகத்தில் ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா.! 9 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11, 640 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இன்று 611 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 9,342 பேர் குணமடைந்துள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 646 பேரில் 49 பேர் வெளிமாநிலங்களில் வந்தவர்கள் என்றும் 5 பேர் வெளிநாடு சென்று வந்தவர்கள் எனவும் கூறியுள்ளனர். இன்று ஒரே நாளில் 10,289 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4,31,739 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது 8,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

unknown node