தலையில் ஒரே பொடுகா? வேப்பிலையுடன் இதை கலந்து போடுங்கள் போதும்!

பெண்களுக்கு அழகு என்றால் அவர்களின் தலை முடி தான், ஆனால், இந்த  தலைமுடி யாருக்கும் உடனே நினைத்தது போல நடப்பது இல்லை. இதற்காக பலரும் மருத்துவமனை செல்வது, அழகு

பெண்களுக்கு அழகு என்றால் அவர்களின் தலை முடி தான், ஆனால், இந்த  தலைமுடி யாருக்கும் உடனே நினைத்தது போல நடப்பது இல்லை. இதற்காக பலரும் மருத்துவமனை செல்வது, அழகு நிலையம் செல்வது என மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், வீட்டில் இருந்தே தலை உதிர்வை போக்கி, பொடுகை நீக்கி அழகிய கூந்தலை தரக்கூடிய ஒரு பொருளை தான் நாம் பார்க்க போகிறோம்.

அதற்கு நாம் பணம் கொடுத்து எதுவும் வாங்க தேவையில்லை. சாதாரணமாக இயற்கையாக வீட்டிலிருக்கும் வேப்பிலை போதும்.

தேவையான பொருள்கள்:

வேப்பிலை தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் ஆகியவை போதும்.

செய்முறை:

வேப்பிலையை நன்றாக கழுவி அதனுடன் சற்று நீர் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும். அதை சற்று அடுப்பில் நீர் வைத்துள்ள சட்டியில், சின்ன தட்டில் வைத்து சூடாக்க வேண்டும். அதன் பின்பு தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஒரு தட்டில் எடுத்து, வேப்பிலை சாற்றை ஒரு வெள்ளை துணியில் போட்டு  வேண்டும்.

unknown node

அதன் பின்பு அந்த வேப்பிலை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவை நன்றாக கலங்கும்படி கலக்க வேண்டும். அதன் பின்பு அதை பஞ்சில் முக்கி நன்றாக மயிர்க்கால்களில் படுமாறு தேய்க்க வேண்டும்.

அதிகப்படியான உடல் சூடு உள்ளவர்கள் சற்று வெந்தயம் கலந்து அரைத்து பூசினால் இன்னும் நல்லது.