வரலாற்றில் இன்று தான் மகாத்மா காந்தி வெள்ளையரின் உப்பு சட்டத்தை எதிர்த்து உப்பு சத்தியாகிரகம் செய்தார்...!!

Today, March 12, 1930, the history of the martyrs of Mahatma Gandhi's whitewash, the Salt March (Salt March) is a planned struggle against the salt tax of the British Indian colonists in colonial India. On March 12, 1930, the Dandi March in Gujarat began to break the ban. On 30th January 1930, the Indian National Congress announced that it was the first act of organizing an independent movement against British rule after the Liberation Declaration of Independence. Gandhi led the way to Dandi, 23 days 240 miles from Sabarmati Ashram, with a large number of Indians along the way, in violation of the ban imposed on salt. 'Gandhi's vision of India has always revitalized India's social history and was in the process of acting. This is the same thing as D.

வரலாற்றில் இன்று மார்ச் 12, 1930. மகாத்மா காந்தி வெள்ளையரின் உப்பு சட்டத்தை முறியடிக்கும் நோக்கோடு தண்டி யாத்திரையை துவக்கிய நாள் உப்பு சத்தியாகிரகம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பதுகாலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசுஅறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும். காந்தி தனது சபர்மதி ஆசிரமத்திலிருந்து 23 நாள்கள் 240 மைல் தூரத்திலுள்ள தண்டிக்கு நடை பயணத்தை வழி நடத்தினார், உப்பை உற்பத்தி செய்வதற்கு விதித்த தடையை மீறி வழியில் அவருடன் இந்தியர்கள் பெருமளவு எண்ணிக்கையுடன் இணைந்தனர்’காந்தியின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் இந்தியாவின் சமூக வரலாற்றை உயிர்ப்பித்து, அதற்கு நிகழ் காலத்தில் செயல் வடிவம் கொடுப்பதாக இருந்தது.அவருடைய தண்டி யாத்திரையும் அத்தகையதுதான்.