சென்னை : இன்று மகாத்மா காந்தியடிகளின் 156வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்டுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் காந்தியடிகள் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். முன்னதாக டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி , எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர். தமிழ்நாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை […]
டெல்லி : மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் (அக்.2,) இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர் அடக்குமுறையில் இருந்த இந்தியர்களை அகிம்சை மூலம் போராட வைத்து சுதந்திரம் பெற்று தந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (மகாத்மா காந்தி). அன்பு, அகிம்சை, அமைதி, எளிமையின் அடையாளமான காந்தியின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம், வாழ்த்து செய்தியை பகிர்ந்து […]
மகாத்மா காந்தி: 1982ஆம் ஆண்டு ‘காந்தி’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் வரையில் மகாத்மா காந்தி பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை – பிரதமர் மோடி. பிரதமர் நரேந்திர மோடி ஏபிபி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் மகாத்மா காந்தி பற்றியும், அவரை இந்திய தலைவர்கள் உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்த தவறிவிட்டனர் என்றும் கூறி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளார். அவர் அந்த பேட்டியில் கூறுகையில், மகாத்மா காந்தி ஒரு சிறந்த மனிதர், சுதந்திரத்திற்கு பிந்தைய கடந்த 75 […]
ஜான்வி கபூர் : காந்தியும், அம்பேத்கரும் நமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள் என பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ஜான்வி கபூர். இவர் தற்போது “மிஸ்டர் & மிஸஸ் மஹி” என்ற திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படம் வரும் மே 31-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. […]
இந்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 76வது நினைவு தினம் இன்று (ஜனவரி 30) அனுசரிக்கப்படுகிறது. காந்தியின் நினைவு நாளை நாடு முழுவதும் “தியாகிகள் தினம்”ஆக அனுசரிக்கப்டுகிறது, அவரது நினைவை போற்றும் வகையில் அவரது உருவப்படத்திற்கும், சிலைகளுக்கும் மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. காந்தியடிகளின் சிந்தனைகளை நசுக்க நினைப்பவர்களை எதிர்கொள்வோம் – காங்கிரஸ் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் […]
இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி டெல்லி பிர்லா மாளிகையில் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய துக்க நாளாக அமைந்தது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கொள்ளப்படுகிறது. அன்றைய தினமே இந்தியாவில் தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், மகாத்மா காந்தியின் 76வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. […]
மகாத்மா காந்தியின் நினைவு நாள் ஜனவரி 30ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் மேலும் அறிக்கை வாயிலாக கூறுகையில், “என் மதத்தின் மீது சூளுரைத்து கூறுகிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயங்க மாட்டேன். ஆனால் […]
இன்று சுதந்திர போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்தவர் என பல்வேறு பெருமைகளை கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 127வது பிறந்தநாள் ஆகும். நேதாஜி பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு என பலரும் தங்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நேதாஜியின் பிறந்தநாள் விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆங்கிலேயர் […]
மகாந்தமா காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் இந்தியாவின் தேச தந்தைகள் – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனையி அம்ருதா பட்நாவிஸ். மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸின் மனையி அம்ருதா பட்நாவிஸ் அண்மையில் தேசத்தந்தை பற்றிய கருத்தை வெளியிட்டுளளார். அதில், நமது நாட்டிற்கு இரு தேச தந்தைகள் இருக்கிறார்கள் என கூறினார். அவர் மேலும் கூறுகையில், நமது நாட்டிற்க்கு தேச தந்தை என்றால் அது மஹாத்மா காந்தி. அதே போல புதிய […]
ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் முதல் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில், மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் விருப்பமான ‘வைஷ்ணவ் ஜன் தோ’ என்ற பஜனை வாசிக்கப்பட்டது. இந்தியாவால் பரிசாகக் கொடுக்கப்பட்ட இந்த மகாத்மா காந்தியின் சிலை ஐக்கிய நாடுகள் சபையின் வடக்கு புல்வெளி தோட்டத்தில் நிரந்தரமாக அமைந்துள்ள காந்தியின் முதல் […]
அம்பேத்கரை இணைக்காமல், அவரை பற்றி பேசாமல் மகாத்மா காந்தியின் வரலாற்றை எழுதவே முடியாது. அண்ணல் அம்பேத்கர் பெயரை உச்சரிக்காமல் இந்தியவில் அரசியல் செய்ய முடியாது. – திருமாவளவன் பேச்சு. நேற்று, சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, மணி விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் தொடங்கப்பட்டது. அதனை தொடங்கி வைத்து பேசிய திருமாவளவன், ஜெய்பீம் 2.0 செயல் திட்டம் மூலம் தமிழ்நாடு முழுவதும் 6000 […]
கொல்கத்தாவில் துர்கா பூஜையின் போது அசுரன் உருவமானது மகாத்மா காந்தி போல இருந்ததாக கூறி எழுந்த புகாரை அடுத்து, அந்த அசுரன் உருவம் மாற்றபட்டது. நாடு முழுவதும் இந்த வாரம் கொண்டாடப்பட உள்ள தசரா திருவிழாவை ஒட்டி, பல்வேறு கோவில்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதே போல, மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் ஓர் இந்து அமைப்பினர் துர்கா பூஜை ஏற்பாடு செய்து இருந்தனர். அதில் மஹீசாசூரன் எனும் அரக்கன் வடிவம் அமைக்கப்பட்டு இருந்தது. […]
75-வது சுதந்திர தின விழா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்தியா விடுதலை அடைந்தது. நம் முன்னோர்கள் நாட்டிற்காக பல தியாகங்கள் செய்து கிடைத்ததுதான் இந்த சுதந்திரம். நம் முன்னோர்களை போற்றும் வகையில் இத்தினத்தை நாம் அவசியம் கொண்டாட வேண்டும். வரும் ஆகஸ்ட்15-ம் தேதி இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரான மகாத்மா […]
தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கும் தனித்துவமான வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் 4 மணிநேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.குறிப்பாக,வேலை கோரும் தகுதியுடைய அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நீல நிற வேலை அட்டை வழங்கப்படுவதுடன் அவர்களுக்கு 2 […]
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா அவர்கள் நேற்று இந்தியா வந்துள்ளார். மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள ஷேர் பகதூர் தியூபா டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார். நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் இந்த பயணத்தில், பொருளாதார வளர்ச்சி, இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாள […]
மோகன்லால் கரம்சந்த் காந்தி அக்டொபர் 2ம் தேதி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தருவதில் காந்தியின் கொள்கைகள், உலகில் வன்முரையால் எதையும் சாதிக்க முடியாது என அகிம்சை முறையில் தன் சுதந்திர போராட்ட கொள்கையை வகித்துக் கொண்டு, தன்னை பின்பற்றுபவர்களை கடைபிடிக்க சொன்னவர். இவரின் இந்த அகிம்சை கொள்கை இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆப்பிரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்தது. 1920ல் காங்கிரஸ் தலைவரான காந்தி, இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தி தம் அகிம்சை […]
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் பணி புரிந்தவர்களுக்கான ஊதியத்தை ஒரே சமயத்தில் வழங்குவதுதான் இயற்கை நியதி,இல்லையென்றால் பின்விளைவுகள் கடுமையாக ஏற்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ்(100 நாள் வேலைத்திட்டம்) பணிபுரியும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து, அனைத்துப் பிரிவினரிடமும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]
உலகுக்கோர் சித்தாந்தத்தைக் கிழக்கிலிருந்து ஒளிபோல் வழங்கிய கிழவர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட். தேசத்தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுபோன்று, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை […]
மகாத்மா காந்தி அவர்களால் இந்திய தேசத்தின் சொத்து என அழைக்கப்பட்ட ப.ஜீவானந்தம் அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி எனும் ஊரில் பிறந்தவர் தான் ப.ஜீவானந்தம். மகாத்மா காந்தி அவர்களால் இந்திய தேசத்தின் சொத்து என்று அழைக்கப்பட்ட இவர் பொதுவுடமை கொள்கைக்காக பாடுபட்டவர். இவர் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அந்நியத் துணிகள் அணிவதை ஒழிக்க வேண்டும் எனும் திட்டத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் […]
மகாத்மா காந்தியின் 74 ஆவது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் டேவிஸ் நகரத்தின் மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 294 கிலோ வெண்கல சிலையை அடையாளம் தெரியாத நபர்களால் சூறையாடப்பட்டது. காந்தி சிலையை சேதப்படுத்திய நபர்கள் குறித்து கலிபோர்னியா மாகாண காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காந்தி நினைவு நாளான இன்று காந்தி சிலை சேதமடைந்து உள்ளதால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]