வரலாற்றில் (21-10-2020)இன்று

தினமும் ஒரு வரலாறு தான் அத்தகைய வரலாற்றினை நாள்தோறும் வழங்கி வருகிறோம்.வரலாற்றில் இன்று:) பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவபட்ட பிரெஞ்சு புரட்சி தினம்(1792) முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை பிரான்சில் வழங்கப்பட்ட தினம்(1945) இன்று பெருமை மிகுந்த நோபல் பரிசை அளித்த ஆல்பிரெட் நோபல்(1833) பிறந்த தினம்

வரலாற்றில் இன்று (21.06.2020).! சர்வதேச யோகா தினம்.!

2015ஆம் ஆண்டு முதல் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று உலக யோகா தினம். கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச் சபையில் ஜூன் 22ஆம் தேதியை உலக யோகா தினமாக அறிவிக்க கோரி பரிந்துரை செய்திருந்தார். இந்த பரிந்துரையை அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல்வேறு நாடுகள் ஆதரித்தன.  இதனை தொடர்ந்து அதே வருடம் டிசம்பர் மாதம் 16ம் … Read more

வரலாற்றில் இன்று (19.06.2020).! 50 வயதை தொடும் ராகுல் காந்தி.!

இன்றைய சில முக்கிய நிகழ்வுகள் (19-06-2020)… 1912-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகளில் தொழிலாளர்கள் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் திட்டம் அமலாகியது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் கடந்த 2019 நாடுமன்ற தேர்தலில் கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். தென்னிந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத முக்கிய நடிகையாக உள்ள … Read more

இன்று உலக புற்றுநோய் தினம்!

இன்று உலக புற்றுநோய் தினம். புற்றுநோயின் வகைகள் மற்றும் அறிகுறிகள்.  நம் உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்துவிடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன. எல்லா கட்டிகளையும் புற்றுநோய் கட்டிகள்  முடியாது. புற்றுநோய் … Read more

வரலாற்றில் இன்று(27.01.2020)… ரஷ்யா பொதுவுடைமை தலைவர் விளாடிமிர் லெனின் நல்லடக்கம் செய்யப்பட்ட தினம்..

ரஸ்யா பொதுவுடைமை தலைவர், விளாடிமிர் லெனின் அவர்களை செஞ்சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட தினம் இன்று. இந்நாளில் இவரை நினைவு கொள்வோம். பிறப்பு: ரஸ்யா பொதுவுடைமை தலைவர், விளாடிமிர் லெனின்  ஏப்ரல் மாதம் 22ம் தேதி, 1870ம் ஆண்டு,  ரஷ்யாவில் உள்ள வால்கா நதியின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் பிறந்தார். குடும்பம்: அவரது பெற்றோர் இல்யா உல்யனாவ்  மற்றும் மாயா உல்யானவ் ஆவர். இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலீச் உல்யானவ் என்பதாகும். இவருக்கு அலெக்ஸாண்டர், டிமிட்ரி … Read more

வரலாற்றில் இன்று(19.01.2020)..மகா வித்துவான் சி.தியாகராசர் பிறந்த தினம் இன்று..

பிறப்பு: திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகில் உள்ள  பூவாளூர் என்ற கிராமத்தில், கடந்த  1826 ஆம் ஆண்டு  சிதம்பரம் செட்டியார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் பள்ளியும்,படிப்பும்: தியாகராசர் திண்ணைப் பள்ளி ஒன்றில்  தொடக்கக் கல்வியை  பெற்றார். பின்னர் தனது ஊருக்கு அருகில் வாழ்ந்த தமிழறிஞர்களிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பின், 1844 ஆம் ஆண்டில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து இலக்கியமும் இலக்கணமும் பயின்றார். பணி புரிந்த இடங்கள்: தமிழிலக்கியத்தில்,  மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் … Read more

வரலாற்றில் இன்று(11.01.2020).. பிரிட்டிஷ் இந்திய ஆளுநர் கர்சன் பிரபு பிறந்த தினம் இன்று..

இந்தியாவில் பல்வேறு சீர்திருத்தங்க்களை மேற்கொண்ட ஆங்கிலேய ஆளுநரின் பிறந்த தினம் இன்று. இவரது பிறந்த நாளில் இவரை நினைவு கூறுவோம். சுதந்திரத்திற்க்கு முந்தய இநதியாவின் அரசியலமைப்பு, கல்வி துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை புரிந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்த ஆங்கிலேய ஆட்சியாளர் கர்சன் பிறந்த தினம் இன்று. இவர்,  ஜனவரி மாதம் 11 ம் நாள் 1859ஆம் ஆண்டு  பிறந்தார், இவர், 1899ம் ஆண்டு முதல்  1905 முடிய பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக பணியாற்றியவார்.பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களில், வெல்லெஸ்லி … Read more

வரலாற்றில் இன்று(09.01.2020).. மரபணுக்களை முதலில் உற்பத்தி செய்து நோபல் பரிசு வென்ற இந்தியர் பிறந்த தினம்..

செயற்கை முறையில் மரபனுக்களை உற்பத்தி செய்து  நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இந்தியர் ஹர் கோவிந்த் குரானா எனும் அறிவியல் அறிஞரின் பிறந்த தினம் இன்று. இவரது பெருமையை போற்றி நினைவு கூறுவோம். இவரது சிறப்புகள்: சுதந்திரத்திற்க்கு முன், அதாவது பிரிவினைக்கு முந்தைய இந்தியாவின் கிழக்கு பஞ்சாப் பகுதியில் ஜனவரி மாதம் 9ம் நாள் பிறந்தார் குரானா. இவரது தந்தை கிராம அலுவலக உதவியாளராக  ஆங்கிலேய அரசில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.குரானா  பஞ்சாப் பல்ககலைகழகத்தில் ‘லிவர் பூல்’ என்று … Read more

வரலாற்றில் இன்று(08.01.2020).. இரண்டாம் ஐன்ஸ்டீன் ‘ஹாக்கிங்’ பிறந்த தினம்…

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் என்பவர்  ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர்  ஆவார், இயற்பியல் அறிவியலாரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் பிறந்த தினம் இன்று. பிறப்பு மற்றும் கல்வி:  இவர் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் ஜனவரி மாதம் 8ம் தேதி 1942ம் ஆண்டு பிறந்தார். இவர் தனது பள்ளிக்கல்வியை செடின்ட் அல்பான்சு பள்ளியிலும் பின் கல்லூரி கல்வியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்திலும் பயின்றார்.பின் டிரினிட்டி கல்லூரியிலும், கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டமும் பெற்றார். வாழ்க்கை போராட்டம்: வருக்கு 21 … Read more

வரலாற்றில் இன்று(07.01.2020).. ஜம்மு காஷ்மீர் முன்னால் முதல்வர் முப்தி முகமது சயித் மறைந்த தினம்..

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமாக இருக்கும் அன்றைய ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் மனமாக இருந்த அம்மாநில முன்னால் முதல்வரின் நினைவுநாளான இன்று அவரது நினைவை போற்றுவோம். பிறப்பு: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பழுத்த  அரசியல்வாதி முப்து முகமது சயித் ஆவார். இவர் 1936ம் ஆண்டு  ஜனவரி மாதம், 12ம் நாள் பிறந்து ,  2016ம் ஆண்டு  ஜனவரி மாதம்  7ம் நாள் இந்த உலகை விட்டு பிரிந்தார். அரசியல் வாழ்க்கை: … Read more