நிதிஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிக் கல்வியின் தரக்குறியீடு குறித்த அறிக்கையை நிதிஆயோக் வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரள மாநிலம் முதல் இடத்திலும்,தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
unknown nodeநிதிஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் 76.6% மதிப்பெண் பெற்று நாட்டிலேயே கேரளா முதலிடத்திலும்,தமிழகம் 73.4 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் 63.2 சதவீதமாக இருந்தது. உத்தரப்பிரதேசம் 36.4% மதிப்பெண்களை பெற்று கடைசி இடத்தில் உள்ளது.