மீண்டும் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ...!

The Tamil Nadu Schools Department has announced that classes will be held again for 10th, 11th and 12th class students.

10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஏற்கனவே ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் கொரோனா அதிகளவில் பரவி வருவதால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஜனவரி 31 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் வகுப்புகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடம் கற்பிக்கப்படும் எனவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் வகுப்புகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.