#Breaking:நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – எந்தெந்த மாவட்டங்கள்? விபரம் இங்கே!

#Breaking: Holidays announced for schools and colleges tomorrow - which districts? Details here!

செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (13.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்ததையடுத்து,பல்வேறு மாவட்டங்களில் சாலைகள்,வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனையடுத்து,மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மழை மற்றும் பல்வேறு பகுதியில் தண்ணீர் தேங்கியிருப்பதன் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (13.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல,திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை(13.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.