மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சூழலில். புயல், வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரண பணிகள் தற்போது வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நாளையும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர், ஸ்ரீபெரம்பத்தூர் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில், சமீபத்தில் வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், ஒருசில நாட்களில் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் (Michaung) எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை […]
புயல் எச்சரிக்கை தொடர்பாக 6 மாவட்டங்களில் இன்று இரவு நேர பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதாகவும், மாவட்ட தலைமை அலுவகங்கள் 24 மணிநேரமும் செயல்படவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் வங்கக்கடலில் உருவாகி தமிழகத்தை நெருங்கி கொண்டிருப்பதால், வடதமிழகம் மற்றும் டெல்டா பகுதிகளில் கனமழை, அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள இன்று தலைமை செயலர் இறையன்பு தலைமையில் அனைத்து துறை செயலர்களும் ஆலோசனையில் ஈடுப்பட்டனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் வருவாய் நிர்வாக […]
காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து வருவதால், திருவள்ளூரில் ஒரு சில இடத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து வரும் நிலையில் நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுசேரியில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, திருவள்ளூரில் ஒரு சில […]
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 1155 ஏரிகளில் 119 ஏரிகள் 100 சதவீதமாக முழுவதுமாக நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதன் காரணமாக பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி தற்போது அதிலிருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதே போல் திருவள்ளூர் மாவட்டதில் உள்ள நீர்நிலைகள் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது . அதில், மொத்தமுள்ள 1155 ஏரிகளில் 119 ஏரிகள் 100 சதவீதமாக […]
திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை அடுத்து நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் வேலையில், தமிழக கடலோரபகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால், தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன் படி மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் , ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், […]
செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (13.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்ததையடுத்து,பல்வேறு மாவட்டங்களில் சாலைகள்,வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.இதனையடுத்து,மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,மழை மற்றும் பல்வேறு பகுதியில் தண்ணீர் தேங்கியிருப்பதன் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (13.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல,திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை(13.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து […]
திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றதனால்,சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதற்கிடையில், சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில்,ஏற்கனவே பெய்த மழையால்,வெள்ள நீர் தேங்கியுள்ளதன் காரணமாகவும்,மழை தொடர்வதாலும் சென்னை,காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளையும் (நவ.12) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஓர் தனியார் மர குடோனில் 3 குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் நகருக்கு அருகே தண்டல்கழனியில் உள்ள மரகுடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 8 குடோன்கள் உள்ளன. அதில் தற்போது வரை 3 குடோனில் உள்ள அட்டைப்பெட்டிகள் மற்றும் மரச்சாமான்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தை கட்டுக்குள் கொண்டு வர […]
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டியில் நந்தகுமார் வசித்து வருகிறார்.இவர் அங்கு உள்ள சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.இவரும் இவர் தாயாரும் 6 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளனர். பின்னர் கடையை சுத்தம் செய்துவிட்டு மறுபடியும் 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீடு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்பு உள்ளே சென்றபோது ஒருவர் தப்பியோட முயன்றுள்ளார். அப்போது தாயார் அவர் கையை பிடித்துக்கொண்டு மகன் நந்தகுமாரை கூப்பிட்டபோது பயந்த நபர் அவரை தள்ளிவிட்டு […]
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் அமித்.இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளமேடு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவர் அங்குள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து வருகிறார். இவரது 4 வயது மகள் வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்துள்ளார்.சிறிது நேரத்தில் விளையாடி கொண்டிருந்த குழந்தை காணாமல் சென்றுள்ளது.பதறி போன பெற்றோர் குழந்தையை அனைத்து இடத்திலும் தேடி பார்த்துள்ளனர். பின்னர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில் மறுநாள் காலை செங்கல் சூலையின் பின்புறம் உள்ள புதரில் ஏதோ ஒரு குழந்தை இறந்து கிடந்துள்ளது.இதனை […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதூரில் ஓய்வு பெற்ற ஆசிரியரான சரளா என்பவர் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் அவரது ஊரில் சந்தேகம் படும் விதமாக ஒரு நபர் சுற்றிக்கொண்டிருந்துள்ளார். அந்த நபர் திருடுவதற்காக சரளாவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.தமது வீட்டிற்குள் யாரோ நுழைந்திருப்பதாக சுதாரித்து கொண்ட சரளா,அக்கம்பக்கத்து வீட்டினருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் திருடனை விரட்டி பிடித்துள்ளனர்.பின்னர் இதன் காரணமாக திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் திருடனை பிடித்துள்ளனர். மேலும் அவர் […]
திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில், தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில், நாட்டிலேயே, முதன்முறையாக, 6 துறைகளை ஒருங்கிணைத்து, 137 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, நவீன சோதனைச் சாவடியை, விரைவில் முதலமைச்சர் திறந்து வைப்பார் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.. சோதனைச் சாவடியில், போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டபோது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உள்ளிட்டோர் உடனிருந்தன.