2018 தமிழக பட்ஜெட்:அரசு நிதியுதவியுடன் வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக மகளிர் விடுதி1
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்களுக்காக அரசு நிதியுதவியுடன் மகளிர் விடுதி கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.490.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.