சிறகடிக்க ஆசை சீரியல்.. அடேங்கப்பா மீனாவுக்கு பாராட்டு விழாவா?..
சிறகடிக்க ஆசை இன்று – சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [ஜூலை 22]கதைகளம் எப்படி உள்ளது என பார்ப்போம்.
அண்ணாமலை மீனா கிட்டயும் முத்து கிட்டயும் மன்னிப்பு கேக்குறாங்க இதுக்கெல்லாம் நீங்க ஏப்ப மன்னிப்பு கேக்குறீங்க அப்படின்னு சொல்றாங்க. நான் தானே மீனாவை கூப்பிட்டு வந்தேன் அதான் இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கா விஜயா பண்ணதுக்கு வேற ஒரு பொண்ணா இருந்தா என்னென்னமோ நடந்திருக்கும் ஆனா இவ எல்லாத்தையும் பொறுத்துட்டு இருக்கா விடுங்க மாமா உங்க பையனுக்காக ஏதோ தப்பு பண்ணிட்டாங்க நீங்க அவங்க கூட பேசுங்க அப்படின்னு சொல்றாங்க ,அண்ணாமலை அதற்கு முடியாது என்று சொல்கிறார்.
இப்போ மீனா கிச்சன்ல பூரி செஞ்சுட்டு இருக்காங்க விஜயா வராங்க வாங்க பூரி சாப்பிடுங்க ன்னு சொல்றாங்க என்ன சந்தோஷத்துல பூரிச்சு போய் இருப்ப போல அதான் பூரி செய்றியா நீயே கொட்டிக்கோ அப்படின்னு சொல்லிடறாங்க.. ரோகிணி வராங்க… ஆன்ட்டி நாங்க கிளம்புறோம் வெளியில சாப்பிடுகிறோம் அப்படின்னு சொல்றாங்க .மீனா சொல்றாங்க இருங்க சாப்பிடுங்க அப்படின்னு..மனோஜ் சொல்லுறாரு ரோகினி பூரி கிழங்கு வாசனை தூக்குது இங்கே சாப்பிடலாம் நாம தான் மாசம் காசு கொடுக்கிறோம் இல்ல அப்படின்னு சொல்றாங்க சரின்னு ரோகினியும் சாப்பிட போறாங்க .
ஸ்ருதி வராங்க என்ன மீனா நீங்க இன்னைக்கு சமைக்க மாட்டேனு நெனச்ச ஆனா சமைச்சிருக்கீங்களே. ஏன் சுருதி அப்புடி சொல்றீங்க ..இல்ல நேத்து நடந்த பிரச்சனைல்ல அப்செட் ஆகி இருப்பீங்கனு நினைசேன் .. நானா இருந்திருந்தால் வெளியில கிளம்பி போய் இருப்பேன்னு சொல்றாங்க. அப்படி சொல்லு பல குரலை அவளுக்கு அப்படியெல்லாம் யோசிக்க தெரியல அதான் எல்லாரும் அவ தலை மேல ஏறி கபடி விளையாடிட்டு இருக்காங்க அப்படின்னு முத்து சொல்றாரு. இப்போ ரவியும் அண்ணி உங்க பொறுமை யாருக்குமே வராது.. என்னடா இங்க பாராட்டு விழா நடத்திட்டு இருக்கீங்க அப்படின்னு மனோஜ் சொல்றாரு .இப்ப முத்து உன்ன மாதிரி ஓடு காலி நகையை வித்தும் அவ பெருசு படுத்தலை இல்ல அதனால அவளுக்கு பாராட்டு விழாவே வைக்கலாம்னு சொல்றாரு.
இப்ப ரோகினியை பார்த்து பார்லர் அம்மா நீயும் உன்னோட நகையெல்லாம் தூங்கும்போது எடுத்து கழுத்துல மாட்டிக்கோ இல்லேன்னா அவன் அதையும் எடுத்துட்டு போய்விடுவான். தேவையில்லாம பேசாதீங்க முத்து உங்க பணத்தை நாங்க கொடுத்துடுவோம்னு சொல்றாங்க. அது குடுக்கும் போது பாத்துக்கலாம்னு முத்து சொல்றாரு. இப்ப ஸ்ருதி சாப்பிட்டு கிளம்புறாங்க ஒரு நிமிஷம் சுருதி ..அப்படின்னு மீனா போறாங்க.. இங்க நடந்த பிரச்சனை பத்தி உங்க வீட்ல எதுவும் சொல்லிடாதீங்க இதுல அத்தையும் சம்பந்தப்பட்டிருக்கிறாங்க குடும்பத்தோட பேரே கெட்டுப் போயிரும் அப்படின்னு சொல்றாங்க.
அதுக்கு ஸ்ருதி தப்பு யாரு பண்ணாலும் தப்பு தப்பு தானேங்க.. சரி நீங்க சொன்னதுக்காக நான் சொல்ல மாட்டேன்னு சொல்றாங்க .இத பார்த்த விஜயா பணக்கார பைத்தியம் எப்படி பேசுது பாரு.. இப்போ மீனா நமக்கு நல்லது பண்ணாலா இல்ல சுருதிக்கிட்ட நல்ல பேர் எடுக்கறதுக்காக பேசினாளா அப்படின்னு யோசிக்கிறாங்க . மனோஜ் ரோகினையும் கடைக்கு போயிடுறாங்க மனோஜ் சொல்றாரு என்னால தான் அம்மாவுக்கு தேவையில்லாத பிரச்சனை .ரோகினையும் சொல்றாங்க ஏன்கிட்ட நீ இத பத்தி முன்னாடியே சொல்லி இருந்தா இவ்வளவு தூரம் நடக்க விட்டு இருக்க மாட்டேன்னு சொல்றாங்க. இப்ப போலீஸ் அங்க வராங்க. என்ன சார் என் பொருள் எல்லாம் கண்டுபிடிச்சிட்டீங்களா அப்படின்னு மனோஜ் கேக்குறாங்க.
போலீஸ் கூட ஒருத்தர் நிக்கிறாரு.. நீங்க ரெண்டு பேருமே ஏமாந்து இருக்கீங்க உங்க பொருளை இவர் தான் வாங்கி இருக்கிறார் இவர் கொடுத்த பணத்தை நீங்க திருப்பி கொடுத்துட்டா அந்த பொருளை எல்லாம் உங்களுக்கு குடுத்துருவாரு .பொருளோட விலையை விட நீங்க கொடுக்க வேண்டிய பணம் கம்மிதான் அப்படின்னு சொல்றாங்க. ரோகிணியும் ஒத்துக்கொள்கிறார். .இப்போ மனோஜ் ஷோரூம்ல வேலை பாக்குற ரெண்டு பேரும் பேசிக்கிறாங்க இந்த ஆளு சரியான கேனையா இருக்கிறான் அவன் பொருளையே அவனே காசு கொடுத்து வாங்குறான் இவன நல்ல ஏமாத்தலாம் . நாமளும் இங்க இருக்குற பொருளை அவன் கிட்டயே வித்துட்டு காசு வாங்கிடலாம் அப்படின்னு பேசிட்டு இருக்காங்க அதோட இன்னைக்கு கூட எபிசோடு முடிந்தது.
நாளைக்கு ஆனா பிரமோல அண்ணாமலை விரும்பிகிட்டு இருக்காரு அப்பா விஜயா தண்ணி எடுத்துட்டு வந்து குடுக்குறாங் அண்ணாமலை அத வாங்காம டைனிங் டேபிளுக்கு போறாரு முத்து வந்து தண்ணி எடுத்து கொடுக்கிறார். மீனா சொல்றாங்க என்னங்க மாமாக்கு என்ன கோவக்கார போல அத்தை கிட்ட எப்ப பேசுவார் என்று தெரியவில்லை. இப்போ மத்தவும் சொல்றாரு இது மாதிரி இதுக்கு முன்னாடி நடந்ததே இல்லை பார்க்கலாம் அப்படின்னு சொல்றாங்க நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு நாளைக்கு எபிசோடு காணலாம்