சிறகடிக்க ஆசை சீரியல்..சிறந்த ஜோடிக்கான விருதை முத்துவும் மீனாவும் தட்டி செல்வார்களா ?..

Vijaya,Muthu (1)

சிறகடிக்க ஆசை இன்று – சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான  [ஆகஸ்ட் 12]காட்சிகளை இங்கே காணலாம்..

விஜயா மீனாவை பார்த்து பரவாயில்லையே ..உனக்கு தைரியம் தான் இவங்க கூடையும் போட்டி போட்டு ஜெயிச்சிடுவேன்னு சொல்ற.. விஜயா எதுக்கு இப்ப கிண்டல் பண்றேன்னு அண்ணாமலை கேக்குறாரு  ..போட்டி முடிஞ்சதும் பார்க்கலாம்னு முத்து சொல்லிட்டு இருக்காரு. இப்போ ஒவ்வொருத்தரும் நான் தான் ஜெயிப்பேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க.மொட்டை மாடில ஸ்ருதி முத்து மீனாவுக்கு போட்டில எப்புடி கேள்வி கேப்பாங்கன்னு சொல்லி கொடுத்துட்டு இருக்காங்க  ..மறுநாள்  எல்லாருமே போட்டி நடக்கிற இடத்துல இருக்குறாங்க. அங்க அவங்களை பத்தி சொல்ல சொல்றாங்க .எல்லாருமே அவங்க அவங்கள பத்தி சொல்லிட்டு இருகாங்க .

இப்போ மனோஜ் ரோகினி கிட்ட சொல்றாரு எல்லாருமே நல்லா படிச்சவங்களா இருக்காங்க இந்த முத்துவும் மீனாவும் இங்க வந்திருக்கவே கூடாது அப்படின்னு சொல்றாரு. இப்போ மனோஜ் சொல்றாரு நான் ஒரு பிசினஸ்மேன் வருங்காலத்தில் இந்தியா ஃபுல்லா என்னோட பிரான்ச் ஓபன் பண்ண போறேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்காரு. ரோகினியும்  தான் சொந்தமா பார்லர் வச்சு நடத்திட்டு இருக்கிறதா சொல்றாங்க. இப்போ முத்து கெத்தா தான் ஒரு டிரைவரனும்  , மீனா பூ கட்டி விக்கிறாங்கன்னு சொல்றாங்க .ஆனா யாருமே சரியா கிளாப்  பண்ணல. இத பாத்த முத்து சொல்றாரு என்ன யாருமே கிளாப்  பண்ணாம இருக்காங்க ஏதோ கல்யாண பந்தியில் சாப்பாடு தீர்ந்து போச்சுன்னு சொன்ன மாதிரியே பாக்குறாங்க அப்படின்னு சொல்றாரு .

shruthi (1)

மீனா சொல்றாங்க விடுங்க நம்ம திறமையை பத்தி நமக்கு தெரியாதா கார் ஓட்டுவது எவ்வளவு பெரிய கஷ்டம் நீங்க எல்லாரையுமே பத்திரமா பாதுகாப்பா கொண்டு போயி அவங்க அவங்க சேர வேண்டிய இடத்தில் விடுறீங்க. முத்துவும்  மீனாவ  பார்த்து நீ பூ கட்டறது தான் கடவுளுக்கே போடுறாங்க அப்படின்னு ஒவ்வொருத்தரும் தன்ன பத்தி புகழ்ந்து பேசிட்டு இருக்காங்க. இப்போ பெண்கள் எல்லாம் மேடைக்கு வர சொல்றாங்க எல்லாருமே போறாங்க அவங்க அவங்களோட தனித்துவத்தை சொல்ல சொல்றாங்க எல்லாருமே சொல்லிட்டு இருக்காங்க. இதுல சுருதி சொல்றாங்க நான் நல்லா வாய்ஸ் மாத்தி பேசுவேன். ரோகிணி சொல்றாங்க நான் ஒரு ஆணை பெண்ணாக மாற்றி மேக்கப் போடுவேன். மீனா என்ன சொல்றதுன்னு தெரியாம தயங்கி நிக்கிறாங்க ..

இப்ப மனோஜ் முத்துக்கு கிட்ட என்னடா உன் பொண்டாட்டிக்கு அவங்க சொன்னது புரியலையா இல்ல தனக்கு திறமை இல்லைன்னு சொல்ல வராளா அப்படின்னு கேக்குறாங்க.  முத்து எந்திருச்சு என் பொண்டாட்டி கண்ண மூடிட்டு பூ கட்டுவானு சொல்லுறாரு .. எல்லாருமே கிளாப் பண்றாங்க. இப்போ ஸ்டேஜ்ல ஒவ்வொருத்தரும் தன்னோட திறமையை வெளிப்படுத்த ஆரம்பிக்கிறாங்க இதுல ரோகினி ஒரு ஆண பெண்ணா மாத்தி மேக்கப் போட்டு காட்டுகிறாங்க  எல்லாருமே கிளாப்  பண்றாங்க. ஸ்ருதி வர்றாங்க ஸ்ருதி வந்து இதான் என்னோட ஒரிஜினல் வாய்ஸ் நான் இப்போ என்னோட மாமியாரோட வாய்ஸ்ல  பேச போறேன் அப்படின்னு சொல்றாங்க .அதோட இன்னைக்கு எபிசோடு முடிந்தது. நாளைக்கு யாரு ஜெயிக்கப் போறாங்கன்னு பாக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested