ரொமாண்டிக் லுக்கில் விஜய்.. தி கோட் படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள "தி கோட்" படத்தின் 3வது சிங்கிள் நாளை மறுநாள் (ஆக. 3) வெளியாகிறது. மேலும், நாளை காலை 11 மணிக்கு மற்றொரு

The Goat Third Single

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “தி கோட்” படத்தின் 3வது சிங்கிள் நாளை மறுநாள் (ஆக. 3) வெளியாகிறது. மேலும், நாளை காலை 11 மணிக்கு மற்றொரு அப்டேட் வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த திரைப்படம் 05 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

இந்த நிலையில், இப்படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பார்ட்டி பாடலான ‘விசில் போடு’, விஜய் மற்றும் பவதாரிணி பாடிய ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்பொழுது, மூன்றாவது பாடலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரை வைத்து பார்க்கையில், மூன்றாவது பாடல் ஒரு ரொமான்டிக் பாடலாக இருக்கும் என தெரிகிறது. இதுவரை படத்தின் நாயகி மீனாட்சி சௌத்ரி தோற்றம் வெளியிடாமல் உள்ளது. அநேகமாக, இந்த பாடல் மூலம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரசாந்த், அஜ்மல் அமீர், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, மோகன் மற்றும் ஜெயராம் ஆகியோரும் நடித்துள்ளனர். மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் இப்படத்தில் AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் தோன்றவுள்ளார்.

படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரித்துள்ளார்.