உயிரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை எழுப்பும் விஜய் ரசிகர்கள்- வாழ்த்து கூறிய பிரபலம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவரது தனித்துவனமான திறமையாலும், நடிப்பில் கவரும் தன்மையாலும் இவருக்கு கோடிக்கணக்கான

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவரது தனித்துவனமான திறமையாலும், நடிப்பில் கவரும் தன்மையாலும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய்காக எதையும் செய்ய துணியும் இந்த ரசிகர்கள், அவரது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் செய்வது வழக்கம்.

அம்முறையில், இந்த வருடம் பசியால் வாடும் மக்களுக்கு விலையில்லா விருந்தகம் மூலம் உணவளித்தனர். அதனை தொடர்ந்து, தற்போது மரம் நடுவதை தொடங்கி உள்ளனர். விஜய் ரசிகர்கள், அதற்காக#BigilTreePlantingChallengeஎனும் ஹாஸ்டேக்கையும் உருவாக்கி ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்களின் இந்த அருமையான நடவடிக்கையை பார்த்த நடிகர் விவேக், மனதார வாழ்த்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.

ஏற்கனவே அப்துல் கலாம் 1 கோடி மரக்கன்று நட வேண்டும் என்ற கடமையை அவருக்கு தந்துள்ளதால் அதற்காக கிரீன் கலாம் எனும் தனது சேவையையும் தொடர்ந்து வருகிறார் விவேக். இது குறித்த விழிப்புணர்வுகளையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறார் நடிகர் விவேக்.

unknown node