இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் “பிகில்”.இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக நடித்துள்ளார்.இப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் “பிகில்” திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்னா மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.அந்த வழிபாட்டில் விஜய் நடித்த “பிகில்” திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென அவர்கள் அர்ச்சனை செய்தனர். அர்ச்சனை முடிந்த பிறகு தெற்கு வடக்கு மாவட்ட தலைவர் குட்டி, கோபி தலைமையில் விஜய் ரசிகர்கள் கோவில் வளாகத்தில் மண் சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.
"பிகில்"திரைப்படம் வெற்றிபெற மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்...!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் "பிகில்".இந்த திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.