விடுதலை 2 தாமதமாக காரணம் என்ன? வெற்றிமாறன் கொடுத்த விளக்கம்!

vetrimaaran about Viduthalai Part 2

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தினுடைய முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி அடைந்துள்ள நிலையில், இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய்சேதுபதியை வைத்து வெற்றிமாறன் எடுத்து வருகிறார்.

இந்த இரண்டாவது பாகத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். அதைப்போல விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடிந்த பாடு இல்லை.

விடுதலை திரைப்படம் எப்படி இருக்கு..? டிவிட்டர் விமர்சனம் இதோ.!

இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் முடியாத காரணத்தால் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஏன் முடியாமல் இருக்கிறது தாமதமாக ஆகிறது என்ற காரணத்தை  இயக்குனர் வெற்றிமாறனே சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ”  விடுதலை 2  படத்தின்  க்ளைமாக்ஸ் காட்சியை மூடுபனியில் எடுக்க முயற்சித்ததால்  தான் தாமதமாகிறது.

100 நாட்கள் முயற்சி செய்தோம், அப்படி எடுத்தால் 4 வருடங்கள் ஆகும் என்பதை உணர்ந்தேன்.
எனவே சிஜியில் செயற்கையாக மூடுபனியை உருவாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். விடுதலை2 படத்தில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட ஒரே ஒரு பிளாஷ்பேக் பகுதி மட்டுமே மீதம் இருக்கிறது. மற்ற பகுதிகள் கொண்ட காட்சிகள் அனைத்தும்  முடிவடைந்துள்ளன” எனவும் வெற்றிமாறன் கூறியுள்ளார். இந்த படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay