சென்னை : வழக்கமாகவே வெற்றிமாறன் இயக்கும் படங்களில் கெட்டவார்த்தைகள் வருவது பெரிய விஷயம் இல்லை. அப்படியான வார்த்தைகள் படத்தின் கதைக்கு தேவைப்படுவது போல இருக்கும் என்பதாலே அதனை தவிர்க்க முடியாமல் வெற்றிமாறனும் தன்னுடைய படங்களில் வைத்துவிடுகிறார். படம் சென்சாருக்கு அனுப்பப்பட்ட பிறகு அதிகாரிகளும் அதனை தூக்கி விடுவார்கள். அப்படி தான் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தினை சென்சார் அதிகாரிகள் பாத்துட்டு படத்தில் இத்தனை கெட்டவார்த்தைகளா? என அதிர்ச்சியாகியுள்ளனர். அந்த கெட்டவார்த்தைகள் பேசும் காட்சிகளை மட்டும் அதிரடியாக […]
சென்னை : விடுதலை 2 படத்தினை படக்குழு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல். காமெடி நடிகராக ட்ராவல் செய்துகொண்டிருந்த சூரியை விடுதலை படத்தில் நடிக்க வைத்து கதையின் ஹீரோ ஆக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை படத்தில் சூரியின் நடிப்பைப் பார்த்த பல இயக்குனர்கள் தொடர்ச்சியாக ஹீரோவாக தங்களுடைய படங்களில் நடிக்க கேட்டு வருகிறார்கள். அதனுடைய தொடர்ச்சியாகத் தான் சூரி, கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். இப்போது தொடர்ச்சியாக அவர் ஹீரோவாக நடித்தாலும் […]
வாடிவாசல் : தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் விடை தெரியாத ஒரு கேள்வியாக இருந்து வந்த ஒரு விஷயம் என்னவென்றால் வாடிவாசல் படம் உருவாகுமா?அதில் நடிகர் சூர்யா நடிப்பாரா இல்லையா என்பது பற்றி தான். ஏனென்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படத்தில் சூர்யா நடிப்பார் எனவும், படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பார் எனவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு விட்டது. இருப்பினும், படத்திற்கான டெஸ்ட் ஷூட்டிங் மட்டுமே எடுக்கப்பட்டு அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் படத்தின் […]
விடுதலை 2 : இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்கும் விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, தற்பொழுது போஸ்டர்கள் கவனம் ஈர்க்கும் வகையில் வெளியாகி இருக்கிறது. A new chapter begins with #ViduthalaiPart2. Directed by the visionary #VetriMaaran! 🌟 First Look is Out #ValourAndLove #வீரமும்காதலும் An @ilaiyaraaja Musical @VijaySethuOffl @sooriofficial @elredkumar […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தினுடைய முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி அடைந்துள்ள நிலையில், இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய்சேதுபதியை வைத்து வெற்றிமாறன் எடுத்து வருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். அதைப்போல விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, சேதன், கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில், இளையராஜாவின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் […]