தெலுங்கில் அதிரிபுதிரி ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தற்போது தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் தயாராகி வருகிறது. பாலிவுட்டில் ஷாகித் கபூர் கதாநாயகனாக நடத்து வருகிறார்.
தமிழில் இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். பாலா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு பற்றி படக்குழு அறிவித்துள்ளது. இப்பட ட்ரெய்லர் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட உள்ளார். இப்படம் பிப்ரவரியில் வெளியாக உள்ளது.
DINASUVADU