பிரபல நடிகர் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்ததில் மகள் , தாய் பலி

this news gives information about The daughter of the cinema was shot dead by a famous actor-pirapala nadikar padapidipil

கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா  நடித்து வரும் “ரணம்” படத்தின் படப்பிடிப்பில்  கார் வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

திரைப்படங்களில் சண்டை காட்சிகளில்  இடம் பெறும்  கார் பறப்பது , கேஸ் சிலிண்டர்களை வெடிக்க செய்வது  போன்ற காட்சிகள்  பாதுகாப்பான முறையில் படப்பிடிப்பது வழக்கம்.

இந்நிலையில் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா  நடித்து வரும் “ரணம்” படத்தின் படப்பிடிப்பில்  கார் வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது சிலிண்டர் வெடித்து காரின் பாகங்கள் சிதறியது.சிதறிய பாகங்கள் அருகில் இருந்த ஒரு குடும்பத்தின் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் அயிரா என்கிற 8 வயது பெண் குழந்தையும் அவரது தாயும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த படப்பிடிப்பில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரிடம்  அனுமதி முன் அனுமதி வாங்கவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.இந்த சம்பவம் போலீஸ் நிலையம் அருகில் நடந்தது.

நடிகர் சிரஞ்சீவி சர்ஜா “காதல் சொல்ல வந்தேன் ” நடிகை மோகன ராஜ் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.