லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது G ஸ்டூடியோ மூலமாக படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார். ஏற்கனவே மைக்கேல், ஃபைட் கிளப் போன்ற படங்களை தயாரித்தும் வந்துள்ளார்.

அடுத்ததாக, பென்ஸ் எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இது LCU கதைக்களத்தில் ஒரு கதையாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தை ரெமோ ,  சுல்தான் பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்றாலே, அது துப்பாக்கி, அதீத சண்டைக்காட்சிகள், ரத்தம், போதை பொருள் என வன்முறை நிறைந்ததாக இருக்கும். அதனை தவிர்த்து தற்போது ஒரு புதிய படத்தை G ஸ்குவாட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதற்கான அறிவிப்பு வீடியோவே சிரிப்பலையாக வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் பிரபல யூ-டியூபர் பாரத் நாயகனாக நடிக்கிறார். நிரஞ்சன் என்பவர் இயக்குகிறார். அறிவிப்பு வீடியோவிலேயே , இந்த படத்தில் துப்பாக்கி, போதை பொருள் இதெல்லாம் வேண்டாம் என்றும், இவனுக நம்ம கிட்ட மாட்டிருக்காங்களா? இல்ல நம்ம இவனுக கிட்ட மாட்டிருக்கோமா என லோகேஷ் பேசும் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

DMK VS BJP LIVE
Pradeep Ranganathan
SAvAFG - 1st Innings
shankar ed
MNM leader Kamalhaasan
BJP State presisident Annamalai - GetOutStalin
Covid HKU5