நடிகர் ஆதி தமிழ் சினிமாவின் இசையமைப்பாளரும் நடிகருமாவார். இவர் தமிழில் மீசையை முறுக்கு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, நட்பே துணை படத்திலும் நடித்தும், இசையமைத்து உள்ளார்.
நடிகர் ஆதியை பொறுத்தவரையில், இவரது பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அதிலும் இவரது பாடல் அதிகமாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்கும்.
இந்நிலையில், ஆதி சமீபத்தில் தமிழ் என்ற ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள ஒவ்வொரு வரிகளும் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், அதில் உள்ள ‘”தமிழனை கொன்று குவித்தாலும், தமிழ் வாழும்” என்ற வரி தமிழர்களின் இதயங்களை தட்டி எழுப்பும் வண்ணம் உள்ளது.
unknown node