மீண்டும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.! முதல்வர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!

World Second Tamil Conference in Chennai

செம்மொழி மாநாடு : மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் கோயம்புத்தூரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. Read More – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் … Read more

தமிழ்நாட்டிற்கும்,தமிழுக்கும் எதிரானது பாஜக – ஜோதிமணி எம்.பி

தமிழ்நாட்டிற்கும்,தமிழுக்கும் எதிரானது பாஜக என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  2014 ஆம் ஆண்டு முதல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ரூ.74.1 கோடி நிதியும், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு ரூ.1487.9 கோடியும் ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய கல்வித்துறையின் இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளார். இது குறித்து ஜோதிமணி எம்பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசு சமஸ்கிருதத்துக்கு … Read more

தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? – அண்ணாமலை

தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? என அண்ணாமலை கேள்வி.  திமுக சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நேற்று பாஜக சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க … Read more

தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு? – மநீம

மத்திய அரசு தமிழ் மொழியை புறக்கணிப்பதாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார உறவுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) அமைப்பில் 1970 முதல் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் இந்தியப் பேராசிரியர்களுக்கான வருகை தரு … Read more

தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் – மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.  சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்பட்டியை  மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ பார்வையிட்டார். இந்த ரயில் பாட்டிகள் 160 கி.மீ வேகத்தை தாங்கக்கூடிய திறன்பெற்றவை. இந்த தொழிற்சாலையில் 102 வந்தே பாரத் ரயில்பட்டிகள் தயாரிக்கப்படுகிறது. அதன் பின் பேசிய அமைச்சர், ரயில்வே தனியார்மயமாக்கப்படாது. தொழிநுட்பங்களை பயன்படுத்தி ரயில்வேத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும், தமிழகத்தில் உள்ள … Read more

திமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக உள்ளது! – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என அண்ணாமலை ட்வீட். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ‘எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே’ என்றும், ‘தமிழ்த்தாய்’ எனவும் என குறிப்பிட்டு ஓவியம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இதனை விமர்சனம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் … Read more

டாணாக்காரன் பட இயக்குனரை அதிர்ச்சிக்குள்ளாகிய காவல்துறை அதிகாரி.., என்ன சொன்னார் தெரியுமா?

இயக்குனர் தமிழ் அவர்களின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சிப் பள்ளிகளும் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் இந்த படம் திரையிடப்பட்ட பொழுது இயக்குனர் தமிழும் அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ், டாணாக்காரன் … Read more

அருமை…தமிழில் மென்பொருள் கருவிகள் – ஐடி நிறுவனங்களுக்கு அழைப்பு!

தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்குவதற்கு பிரபல மென்பொருள் நிறுவனங்களுக்கு தமிழ் இணையக் கல்விக் கழகம் அழைப்பு. உலகெங்கும் வாழும் தமிழர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழர்தம் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இணையவழி முன்னெடுத்துச் செல்வதிலும் தமிழில் மென்பொருட்கள் உருவாக்குவது உள்ளிட்ட கணித்தமிழ் வளர்ச்சியிலும் தமிழ் இணையக் கல்விக் கழகம் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. இந்நிலையில்,தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்குவதற்கு பிரபல மென்பொருள் நிறுவனங்களுக்கு தமிழ் இணையக் கல்விக் … Read more

குட்நியூஸ்…பள்ளி கல்லூரி முதல் அரசு அலுவலகங்கள் வரை;இனி தமிழில்தான் ‘இனிஷியல்’ – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதும்போது முன் எழுத்தை தமிழில் எழுத தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “2021-2022-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை 46-இன் போது தொழில் துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. தமிழில் பெயர் எழுதும் … Read more

தமிழை பயிற்று மொழியாக்க கோரிய மனு தள்ளுபடி …!

தமிழை பயிற்று மொழியாக்க கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழைப் பயிற்று மொழியாக்க உத்தரவிடக் கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.