பஸ் கண்டக்டராக இருந்தரஜினிகாந்த், நடிகராக வேண்டும் என்ற சினிமா கனவுடன் சென்னைக்கு வந்து, 1975-ல் ‘அபூர்வ ராகங்களில்’ தொடங்கிய ரஜினியின் திரைப்பயணம், நிக்காமல் 70 வயதை கடந்தும் ரயில் போல் ஓடிக்கொண்டே இருக்கிறது.
அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமான இவர் 48 வருடங்களாக இன்னும் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகராவும் திகழ்ந்து வருகிறார். இன்று தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 73-வது பிறந்தநாள்.
இந்த நிலையில், அவரது 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திரைப் பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக,தமிழ் சினிமாவில், கமல்ஹாசன், தனுஷ், குஷ்பூ, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் ரஜினிகாந்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து உள்ளனர்.
அந்த வரிசையில், மலையாள நடிகர் மம்முட்டி தனது X தள பக்கத்தில், “இனிவரும் ஆண்டு வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துக்கள். எப்போதும் போல் ஆரோக்கியமாகவும் ஆசீர்வாதமாகவும் இருங்கள். பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeமேலும், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது X தள பக்கத்தில், “ஒரே ஒரு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் வளர்ச்சிபல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeமலையாள நடிகர் மோகன் லால் தனது X தள பக்கத்தில், “என் அன்பான ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கும் கருணை மற்றும் பணிவின் உண்மையான உருவகமாக, இன்னும் பல ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான ஆண்டுகள் வரவுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown nodeஅரசியல் பிரமுகர்கள்
தமிழ்நாடு முதல்வர்மு.க. ஸ்டாலின்,“மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் பல வெற்றிப்படங்களை தந்து உச்சநட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல், “தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்” என X தளத்தில்இபிஎஸ்குறிப்பிட்டுள்ளார்.
