விஸ்வாசம் இயக்குனர் சிவா தளபதியை பற்றி என்ன கூறியுள்ளார் தெரியுமா?!!!

சிறுத்தை , வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய சிவா அடுத்ததாக தல அஜித்தை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்த

சிறுத்தை , வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கிய சிவா அடுத்ததாக தல அஜித்தை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்து உள்ளார்.

இந்த படத்திற்கான புரோமோஷனுக்கு பல பேட்டிகள் கொடுத்து வருகிறார் இயக்குனர் சிவா. அப்படி ஒரு புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனரிடம், விஜய் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சிவா , ‘ அவர் எப்போதும் என்னிடம் அன்பாக பேசக்கூடியவர். அவருக்காக ஒரு கதை ரெடி செய்து வைத்துள்ளேன். விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என கூறியுள்ளார்.

DINASUVADU