மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காப்பாய், மெட்றாஸ், ஒரு நாள் கூத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் கமலஹாசன்

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காப்பாய், மெட்றாஸ், ஒரு நாள் கூத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு, அதில் வெற்றி பெற்றார். தற்போது இவர் அட்டகத்தி தினேசுடன் நடித்துள்ள ‘இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

unknown node

இந்நிலையில், இவர் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது தனது அடுத்ததடுத்த திரைப்படங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், நடிகர் விஜய் சேதுபதி உடன் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறேன் என்றும், நடிகர் சிபிராஜுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.