சிங்கப்பூரில் நடிகை ஸ்ரீதேவி உருவில் ஒரு பொம்மை..!! வைரல் ஆகும் புகைப்படம்....

Actress Sridevi suddenly died of a heart attack. Sridevi, who had been with her husband and daughter for a marriage in Dubai, suddenly suffered a heart attack. The evening of February 28, his body was cremated with full state respect. Seliyam, a married couple in Singapore, has done a toy in the form of Sridevi. The toy photo is now dying on social networks.

இந்திய திரையுலகத்தின் பெண் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை ஸ்ரீதேவி திடீரென மாரடைப்பால் துபாயில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 54. துபாயில் நடைபெற்ற  திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக கணவர் மற்றும் மகளுடன் சென்றிருந்த ஸ்ரீதேவிக்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

திரையுலகினர்,பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் பிப்ரவரி 28 அன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் சிங்கப்பூரில் உணவகம் வைத்திருக்கும் ஒரு தம்பதியினர் நடிகை ஸ்ரீதேவி உருவில் ஒரு பொம்மை(doll) செய்து உள்ளனர். அந்த பொம்மையின் புகைப்படம் தற்போது பேஸ்புக்,ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.