கேரளா : கோழிக்கோடு மாவட்டம், பேய்ப்பூர் கடற்கரையில் இருந்து சுமார் 14 கடல் மைல் தொலைவில், சிங்கப்பூர் கொடியுடன் இயக்கப்படும் சரக்கு கப்பலான MV Wan Hai 503கடந்த ஜூன் 9-ஆம் தேதி அன்று காலை 10:30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்தக் கப்பலில் குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட ஆபத்தான ரசாயனங்கள் இருந்ததால், வெடிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்தது. இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் உடனடியாக […]
கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய 270 மீட்டர் நீளமுள்ள கொள்கலன் கப்பலாகும். கொழும்புவில் இருந்து மும்பைக்குச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்கு கப்பல் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காலை 10:30 மணியளவில் கப்பலின் தளத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 7 ஆம் தேதி கொழும்பிலிருந்து புறப்பட்ட இந்த கப்பல் ஜூன் 10 […]
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறதாம். சிங்கப்பூரில் மட்டும் 14,200 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஹாங்காங்கில் ஒரே வாரத்தில் கொரோனாவிற்கு 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இதன் தாக்கம் தீவிரமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்ப்பு சக்தி குறைந்து […]
ஆந்திரா : ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா தனது மகன் தீ விபத்தில் சிக்கி உயிர்தப்பியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருமலை வெங்கடேஸ்வரருக்கு நன்றி செலுத்த முடிவு செய்து சில விஷயங்களை செய்திருக்கிறார். கடந்த ஏப்ரல் 8 அன்று, சிங்கப்பூர் பள்ளியில் பயின்று வரும் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர், அங்கு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார் என்றும், இதனால் கை, கால்களில் காயம் ஏற்பட்டது என்றும் தகவல் வெளியாகி […]
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க் சங்கர் பவனோவிச் சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வருகிறார். இவரது மனைவி அன்னா லெஷ்னேவா சிங்கப்பூரில் முதுகலை படிப்பு பயின்று வருவதால் அவரது மகனும் அங்கு பயின்று வருகிறார். இந்நிலையில், சிங்கப்பூர் பள்ளியில் பயின்று வரும் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர், அங்கு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார் என்றும், இதனால் […]
சென்னை : தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் தொடர்பான காரசார விவாதமானது நடைபெற்று வருகிறது. அப்படி தான் இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு கழிவுநீரை குடிநீராக மாற்றுவது தொடர்பாக சில விஷயங்களை பற்றி பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு ” தமிழ்நாட்டில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீராக மாற்றும் திட்டம் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் செயல்படுத்தப்படும் முறையைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறையை சமாளிக்க முயற்சி […]
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன செஸ் வீரர் டிங் லின்னை தோற்கடித்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் வென்றார் . தமிழகத்தை சேர்ந்த குகேஷுக்கு ஏற்கனவே தமிழக அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்து பாராட்டி இருந்த நிலையில், இன்று தமிழக அரசு சார்பில் குகேஷுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதற்காக இன்று சென்னை கலைவாணர் அரங்கிற்கு திறந்தவெளி வாகனத்தில் குகேஷ் ஊர்வலமாக […]
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது . இதில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் விளையாடி வருகிறார். இவர் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின்னை எதிர்கொண்டு விளையாடி வருகிறார். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 11வது சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் குகேஷ் 29வது நகர்வில் தனது வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 11 சுற்றுகளில் 6-5 என்ற வீதத்தில் […]
சிங்கப்பூர் : பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளர். நேற்று புருனே நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலையில் சிங்கப்பூர் சென்றடைந்தார். இன்று அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு லாரன்ஸ் வோங் தலைமையில், அரசு உயர்மட்டக் குழு சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, இரு நாட்டு உறவுகள் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதனுடே, சிங்கப்பூரில் திருவள்ளுவர் […]
சிங்கப்பூர் : பிரதமர் மோடி புரூனே நாட்டுக்கு நேற்று முன்தினம் அரசு முறை பயணமாகப் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து, சிங்கப்பூர் பிரதமரின் அழைப்பை ஏற்று 2 நாட்கள் அரசு முறைப் பயணமாகச் சிங்கப்பூருக்குச் சென்றார். அதன்படி, நேற்று மாலையில் சிங்கப்பூர் விமான நிலையத்திற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சருமான கே.ஷண்முகம் நேரில் சென்று வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, இன்று காலை பிரதமர் மோடி சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்குச் சென்றடைந்தார். அங்கு அவரை சிங்கப்பூர் […]
புதுடெல்லி : பிரதமர் மோடி புரூனே நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். இந்தியா மற்றும் புருனே இடையே நட்புறவு ஏற்பட்டு 40 ஆண்டை ஒட்டி, அந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே செல்கிறார். இதன்மூலம் புரூனே செல்லும் முதல் இந்தியத் தலைவர் எனும் பெருமையை மோடி பெறுகிறார். புருனே பயணத்தின் போது, வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (கிழக்கு) ஜெய்தீப் மசூம்தார், புருனேயுடனான உறவுகள் குறித்து பிரதமர் […]
பாஸ்போர்ட் தரவரிசை: உலகளாவிய சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசை பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 82வது இடத்தில் உள்ளது. லண்டனை சேர்ந்த பிரபல உலகளாவிய குடியுரிமை ஆலோசனை நிறுவனமான ஹென்லி பார்ட்னர்ஸ் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலானது ஒரு நாட்டின் பாஸ்போர்ட் கொண்டு எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். விசா இல்லாமல் ஒரு நாட்டின் பிரஜையை எத்தனை நாடுகள் வரவேற்கும் என்பதை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. அதன்படி, ஹென்லி பாஸ்போர்ட் தரவரிசையின் கீழ், சிங்கப்பூர் முதலிடத்தை […]
சிங்கப்பூர் : வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்குச் சிங்கப்பூரில் உள்ள உணவுக் கழகம் (SFA) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மாதிரியான உணவு வகைகள் ஹாங்காங் மற்றும் தாய்லாந்தில் ரோடு கடைகளில் மிகவும் பிரபலமாக விற்கப்படுகிறது. தற்பொழுது, அந்த பூச்சியினங்களை உணவாக உட்கொள்ள சிங்கப்பூரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பூச்சி இனங்களை சீன மற்றும் இந்திய உணவுகள் உட்பட உலகளாவிய உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ள ஹோட்டல்களின் மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பூச்சிகளில் சிள்வண்டுகள், […]
செஸ் : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் உலகசெஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை குகேஷ் மற்றும் டிங் லிரன் இடையேயான நடைபெறும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது சிங்கப்பூரில் நடைபெறும் என்று FIDE இன்று அறிவித்துள்ளது. இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த 18 வயதான குகேஷ் தற்போதைய உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனுடன் இளம் […]
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள மெரினா பே சாண்ட்ஸ் கேசினோ (Marina Bay Sands Casino-MBS Casino) என்ற இடத்தில் கேசினோ மூலம் 4 மில்லியன் டாலர் ஜாக்பாட் மூலம் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி பெற்ற ஆனந்த அதிரிச்சியில் அந்த நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதன் காரணமாக சிறுது நேரத்தில் இறந்தார். அந்த கேசினோவுக்கு தினசரி வாடிக்கையாளர் அடையாளம் தெரியாத அந்த நபர், அன்றைய நாளின் அதிக பங்குகள் கொண்ட அவர் விளையாடி இருக்கிறார். அப்போது […]
சென்னை: சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா KP.2 பற்றி மக்கள் பயப்பட வேண்டாம் என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ள்ளது. 2020ஆம் ஆண்டு உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று பேரலை பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தியது. இதற்கான தடுப்பூசிகளையும் பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அந்த பெருந்தொற்றில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் தற்போதும், அவ்வப்போது புதுபுது கொரோனா வைரஸ் பல்வேறு பரிமாணங்களில் உருவாகி கொண்டு தான் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்த கொரோனா புதிய […]
சென்னை : சிங்கப்பூர் நாட்டின் லாரன்ஸ் வோங்க் நேற்றைய நாளில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகாலமாக சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார். மேலும், அந்நாட்டின் துணைப் பிரேதமாராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த லாரன்ஸ் வோங்க் நேற்று இரவு முறைப்படி பிரதமர் பதவியை ஏற்று கொண்டுள்ளார். மேலும், இவர்தான் சிங்கப்பூரின் 4-வது பிரதமரும் ஆவார். இதனால் சிங்கப்பூர் வரலாற்றில் 59 ஆண்டு காலம் நீடித்த […]
இந்திய வம்சாவளியினரான சிங்காரம் பலியநேப்பன் எனும் 61வயது நபருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. சிங்காரம் பலியநேப்பன் (வயது 61) சிங்கப்பூரில் நீண்ட வருடங்களாக வசித்து வருகிறார். இவர் தான் வசிக்கும் பகுதியில் அருகில் வசிக்கும் பணிப்பெண் ஒருவரை லிப்டில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் , ஒரு சைக்கிள் கடையில் இருந்த நபரை தாக்கியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் ரூ. […]
சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும், மற்ற உலக நாடுகளில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல விசா பயன்பாடுகள் இன்றி பயணிக்கும் வசதியை கொண்டு அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை கணக்கிடப்படும். அதாவது ஒரு நாடு எந்த நாட்டினரை விசா பயன்பாடுகள் இன்றி வரவேற்கிறது எனபதை பொறுத்து அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை தெரியவரும். இந்த பாஸ்போர்ட் வலிமை தரவரிசை பட்டியலை சர்வதேச தரவு ஆராய்ச்சி அமைப்பான ஹென்லி அமைப்பு ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் […]
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடினர். அரசு மாளிகைகள், முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. மேலும், சிலவை ஏற்றிக்கப்பட்டது. அந்த சமயம், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி, மாலத்தீவில் தஞ்சமடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். அவர் விரைவில் நாடு திரும்புவார் என இலங்கை அரசியல் […]