தனது பெயரை பச்சைக் குத்திய ரசிகரை நேரில் சந்தித்த நிவேதா பெத்ராஜ்.!

Nivetha Pethuraj is happy to meet an avid fan with her name tattooed on her hand.Those photos are going very viral on social websites.

நிவேதா பெத்ராஜ் தனது பெயரை கையில் பச்சை குத்திய தீவிர ரசிகனை நேரில் சந்தித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து ,டிக் டிக் டிக் , சங்கத்தமிழன் ,திமுரு புடிச்சவன் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும்,அல வைகுந்தபுரமலோ உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நிவேதா பெத்ராஜ்.தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தும் இவரது தீவிர ரசிகர் ஒருவர் நிவேதாவின் பெயரை பச்சை குத்தியுள்ளார் .

இதனை அறிந்த நிவேதா தனது தீவிர ரசிகனான பிரபு என்பவரை அவர் பாண்டிச்சேரியில் கலந்த கொண்டு வரும் படப்பிடிப்பு தளத்தில் பிரபுவை வரவழைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் . அதனுடன் ரசிகருடன் புகைப்படமும் எடுத்து கொண்டார் . தற்போது அந்த புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown nodeunknown node
தனது பெயரை பச்சைக் குத்திய ரசிகரை நேரில் சந்தித்த நிவேதா பெத்ராஜ்.!