நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வேலிலேயாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதில், பிகில் படத்தின், ஆடியோ வெளியீட்டு விழா, சாய்ராம் கல்லூரியில் படு பிரமாண்டமாக நடக்கவுள்ளதாம். இந்த விழா செப்.19-ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த விழாவில் முக்கியமான சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளாராம்.
unknown node