தல அஜித் சினிமா சூட்டிங் வேலைகள் தவிர மற்ற நேரங்களில் வெளியே தலை காட்ட மாட்டார். அவர் உதவிகள் செய்தாலும் அது வெளியில் தெரியாது.அதற்கு அப்படியே எதிரானவர் தளபதி விஜய். அவர் தனது சூட்டிங் மட்டுமல்லாது பட விழாக்கள் என தன்னால் முடிந்தவரை கலந்து கொள்வார். மேலும் தன் மனதில் பட்டதை தைரியமாக பொது வெளியில் சொல்வார். தனது மன்றங்கள் மூலம் தன்னால் முடிந்த உதவிகளை செய்வார்.இந்நிலையில் இவர்கள் இருவருடனும் வேலை செய்த கலா மாஸ்டர் ஒரு பேட்டியில் கூறுகையில், நடிகர் அஜித் திரைமறைவில் பல உதவிகள் செய்வார். அவர் வெளியில் வர வேண்டும் எனவும், விஜய் ஒரு அற்புதமான டான்சர் அவர் முன்னர் நடன இயக்குனர்களே பயப்படுவர். விஜய் அமைதியாக உதவிகளை செய்வதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது என்றும் கூறினார்.
DINASUVADU