கொரோனா தொற்று காரணமாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கை தள்ளி வைத்த நடிகர் சிரஞ்சீவி!

It has been reported that Chiranjeevi has postponed the film Vedalam is in development and the corona infection will be completely reduced.

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் உருவாகியிருந்த நிலையில் கொரோனா தொற்று முழுவதுமாக குறையட்டும் என சிரஞ்சீவி படத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிவா அவர்களின் இயக்கத்தில் தல அஜித், அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் மற்றும் தங்கையாக லட்சுமிமேனன் நடித்து கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் வேதாளம். தமிழில் இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த படத்தில் நடிகர் சிரஞ்சீவி அவர்கள் கதாநாயகனாக நடிக்க ஷெபின் அவர்கள் இயக்க உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. இந்த படத்தில் சிரஞ்சீவி தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது சிரஞ்சீவி ஆச்சாரியா படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்த தெலுங்கு ரீமேக்கில் மற்றொரு நடிக்க தயாராக உள்ளதாக தயாராகியுள்ள நிலையில், வேதாளம் படத்திற்கான தெலுங்கு ரீமேக் எப்பொழுது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அதற்க்கு கொரோனா தொற்று முழுவதுமாக குறைந்ததும், இந்த படத்தில் நடிக்கலாம் என சிரஞ்சீவி முடிவு செய்துள்ளதாகவும், ஏனென்றால் இதில் அதிரடியான சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.