கோமாளி படத்தை அலேக்கா தூக்கினார் போனி கபூர்..!

Default Image

நடிகர் ஜெயம்ரவி கோலிவுட் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்.இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் “கோமாளி” படம் திரைக்கு வந்து வெற்றிநடை போட்டு  வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது.

தற்போது இந்த படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு உள்ளன. தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்த இந்த படத்தின் ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கைப்பற்றியுள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் ஹீரோவாக நடிக்கிறாராம்.

இது பற்றி கூறிய போனி கபூர் “கோமாளி” படத்தின் ரீமேக் உரிமையை பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. படத்தை எல்லா மொழிகளிலும் ரீமேக் செய்ய திட்டமிட்இருக்கிறோம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்