அனிருத்தை பாட வைக்கலாமா..? அனுமதி கேட்ட ஜிப்ரான்… அஜித் சொன்ன பதில்.?

Default Image

அஜித் நடித்து வரும் “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. எச்.வினோத் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்கிடையில், படத்தின் முதல் பாடல் குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, துணிவு திரைப்படத்தின் முதல் பாடல் இந்த மாதம் இறுதியில் வெளியாகியுள்ளதாகவும், அந்த பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

படத்தில் அனிருத்தை ஒரு பாடல் பாட வைத்தால் நன்றாக இருக்கும் ஜிப்ரானும் ஆசைப்பட்டு அஜித்திடம் அனிருத்தை பாட வைக்கலாமா..? என்று விருப்பம் கேட்டுள்ளாராம். அதற்கு அஜித் இசையை பொறுத்தவரை உங்களுக்கு என்ன விருப்பமோ அதை செய்யுங்கள் என சொல்லிவிட்டாராம்.

ஏற்கெனவே அஜித்திற்கு ‘வேதாளம்’ படத்தில் அவர் பாடிய ‘ஆலுமா டோலுமா’ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது, எனவே நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துக்காக அனிருத் பாடல் பாடியுள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ‘AK62’ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்