நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக பல படங்கள் வெளியாக உள்ளன. அதில் முக்கியமாக, பாக்ஸர், மாஃபியா, சினம், அக்னி சிறகுகள் போன்ற படங்களும் ,அடுத்து தடம் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படம், குற்றம் 23 பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு படம் என மிகவும் பிசியான நடிகராக அருண் விஜய் மாறிவிட்டார்.
unknown nodeஇதில் அக்னி சிறகுகள் படத்தை மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார். இதில் இன்னொரு நடிகராக விஜய் ஆண்டனி நடிக்கிறார். அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தாஜ்மஹால் படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகை ரியா சென் தங்கை ரெய்மா சென், ஸ்மிதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளனர்.