தல அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் வெளியாகி வரும் அனைத்தும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்துள்ளது. இந்த படம் பல சாதனைகளை படைத்தது, பல கோடிகளை வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் எச்.வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து தளபதி விஜயின் தந்தை அவர்கள் கூறுகையில், அனைவருமே நடிகர் அஜித் போல, சமூக விழிப்புணர்வு உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று, நடிகர் அஜித்தை பாராட்டியுள்ளார்.
unknown nodeஇந்நிலையில், இதுகுறித்து தளபதி விஜயின் தந்தை எஸ்.வி.சந்திரசேகர் அவர் கூறுகையில், எனது மனைவி சோபா அஜித்தின் படம் ரிலீஸ் ஆனவுடன் முதல்நாளே சென்று பார்த்து விடுவார். அதுபோல, நேர்கொண்டப்பார்வை திரைப்படத்தையும் எனக்கு முன்பதாகவே சென்று பார்த்து விட்டார் என்றும், மேலும் அஜித்தின் விசுவாசம் படத்தில் தந்தை – மகள் பாசம் என்னை கண்கலங்க வைத்தது என்றும் கூறியுள்ளார்.