தற்கொலை முயற்சி செய்த நடிகை நிலானி..!போலீசார் வழக்குப்பதிவு ..!

தற்கொலைக்கு முயற்சி செய்ததாக சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடைந்த போது,

தற்கொலைக்கு முயற்சி செய்ததாக சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தீவிரமடைந்த போது, போலீஸ் சீருடையில் தோன்றி, போலீசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து கைதானவர் நிலானி.

நிலானிக்கும், சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. திருமணம் செய்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது.

unknown node

இந்த நிலையில் தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் நிலானி பங்கேற்றிருந்த போது, அங்கு வந்த காந்தி லலித்குமார் நிலானியுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை அவதூறாகவும் பேசியுள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பில் இருந்தவர்கள் காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நடிகை நிலானி, மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்று, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தகராறு செய்வதாக புகார் அளித்தார். அதன்பேரில் மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் நடிகை நிலானியிடம் தகராறில் ஈடுபட்ட அவரது காதலன் காந்தி லலித்குமார், நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் சின்னத்திரையில் பெரும் பரபரப்பையும் , அதிர்வலையையும் ஏற்படுத்தியது.இந்நிலையில் நிலானியுடன் லலித்குமார்நெருங்கி இருப்பதை போன்ற போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.அது மட்டுமில்லாமல் இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற படுக்கையறை போட்டோ , மெட்டி அணிவது போன்ற வீடியோ என ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி தொடர்ந்து அதிர்ச்சியை உண்டாக்கியது.இந்நிலையில் இன்று காவல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்த நிலானி கண்ணீருடன் பேட்டியளித்தார் அதில் அவர் ,

unknown node

என்னை பற்றி தவறாக செய்தி வெளிவருகிறது.நான் தலைமறைவாகிட்டேன் என்றும் , நான் தான் லலித்குமார் மரணத்துக்கு காரணம் என்று சொல்லி என்னை கேவலப்படுத்துகிறார்கள் என்று கண்ணீருடன் பேட்டியளித்தார்.தொடர்ந்து பேசிய அவர் எனக்கு கணவர் கிடையாது , இரண்டு குழந்தைகளுக்காக வாழ்கிறேன் .லலித்குமார் ஒரு பொம்பளை பொறுக்கி 4 பெண்களை ஏமாற்றியவர்.எனக்கு என்னுடைய குழந்தைகள் தன முக்கியம்.அனால் லலித்குமார் என்னை மிரட்டினார்.நான் அவருடன் நெருங்கி இருந்த மாதிரி எடுத்த போட்டோக்கள் சின்னத்திரைக்கு எடுத்த போட்டோக்கள் என்று அழுது கொண்டு கூறினார்.அதுமட்டுமில்லாமல் அவர் ஒரு ஆண்மையற்றவர் அவருக்கு ஒரு பெண் தேவை என்பதற்காக என்னை கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறார் என்றும் கண்ணீர் மல்க  தெரிவித்தார்.

unknown node

இதன் பின் நேற்று முன்தினம்  நிலானி சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்தார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலானி ஆபத்தான நிலையில் கே.கே.நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவர் மீது மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.