‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் 52வது படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார் தனுஷ். இப்படத்தை ‘Dawn Pictures’ சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
#D52 #DD4 Om Namashivaaya ????♥️ @RedGiantMovies_ @DawnPicturesOff @Aakashbaskarann @wunderbarfilms @theSreyas @gvprakash @editor_prasanna pic.twitter.com/o2QsS4FGOr
— Dhanush (@dhanushkraja) September 19, 2024
பா.பாண்டி (2017), ராயன் (2024), மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் இயக்கும் நான்காவது முயற்சி இதுவாகும்.
இந்த படத்தில் ஹீரோவாக தனுஷ் நடிக்கையில், அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வந்துள்ளது. அது மட்டும் இல்லாமல், இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பாடல் காட்சியுடன் தேனியில் தொடங்கியுள்ளது.
ஆம், கிட்டத்தட்ட பத்து நாட்கள் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. நடிகர் தனுஷ் கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான ‘ராயன்’ படத்தில் நடித்திருந்தார்.
அந்த படம் வட சென்னை கதை பாணியில் பிரைட் ரைஸ் கடை நடத்தி வரும் தனுஷ், எதிர்பாரா விளங்கத்தில் சிக்கி எப்படி தப்பிபாரோ.? அதே போல் இந்த படத்தில் தேனியில் ஒரு இட்லி கடை நடத்தும் தனுஷ் என்ன சம்பவம் செய்ய போகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025