TOP 10 Cars விற்பனைப்பட்டியல் – பிப்ரவரி 2018
இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையின் , கடந்த பிப்ரவரி 2018 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை அதாவது விற்பனையில் டாப் 10 கார்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் இந்தியாவின் முன்னணி மாடலாக விளங்குகின்ற மாருதி ஆல்டோ 35 லட்சம் விற்பனை இலக்கினை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், முதல் 10 இடங்களில் இந்த மாருதி ஆல்டோ கார் 19,760 அலகுகள் விற்பனை ஆகி முதல் 10 இடங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் முன்னணி செடான் மற்றும் பிரபலமான டிசையர் கார் டாப் 10 கார்களின் பட்டியிலில் 20,941 யூனிட்கள் விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது.
மொத்தம் 10 இடங்களில் 6 இடங்களை மாருதி நிறுவனத்தின் ஆல்டோ, ஸ்விஃப்ட், வேகன்ஆர், பலேனோ பிரெஸ்ஸா, வேகன்ஆர் ஆகிய கார்களும் இடம்பிடித்து முதல் 5 இடங்களை மாருதி பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து ஹூண்டாய் இந்தியா பிரிவு நிறுவனத்தின் கிராண்ட் ஐ10, எலைட் ஐ20, மற்றும் க்ரெட்டா எஸ்யூவி ஆகியவற்றுடன், இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகிற வாகனம் மஹிந்திரா பொலிரோ 10வது இடத்தில் உள்ளது.
தொடர்ந்து முழுமையான 2018 பிப்ரவரி மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.
விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – பிப்ரவரி 2018
1.மாருதி சுசூகி டிசையர் – 20,9411.
2.மாருதி சுசூகி ஆல்டோ – 19,760.
3.மாருதி சுசூகி ஸ்விஃப்ட் – 17,291.
4.மாருதி சுசூகி பலேனோ – 15,807.
5.மாருதி சுசூகி வேகன்ஆர் – 14,029.
6.ஹூண்டாய் எலைட் ஐ20 – 13,378.
7.மாருதி விட்டாரா பிரெஸ்ஸா – 11,620.
8.ஹூண்டாய் கிராண்ட் ஐ10 – 10,198.
9.ஹூண்டாய் க்ரெட்டா – 9,278.
10.மஹிந்திரா பொலிரோ – 8,001
மேலும் தகவல்களுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு.
top 10 car sales list