வாட்டும் வெயிலுக்கு மத்தியில் ஜில் நியூஸ்…தென் தமிழகத்தில் மழை.!
Tn Rain: அடுத்த மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 1ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமாக இருக்கும் நிலையில், அடுத்த மாதம் தொடக்கத்தில் அதாவது, (02.04.2024) மற்றும் (04.04.2024) ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் கொடுக்கவில்லை.
சென்னை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.